சென்னையில் முக்கிய சாலைகளில் வாகனங்களை பார்க்கிங் செய்ய கட்டணம்.. எங்கு எவ்வளவு? முழு விவரம்
சென்னை: சென்னை மாநகர மக்கள் தியாகராயா சாலை, பாண்டி பஜார் தவிர மற்ற வாகன நிறுத்த இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு நான்கு சக்கர வாகனங்களுக்கு கட்டணம் ரூ.20, இரண்டு சக்கர வாகனங்களுக்கு கட்டணம் ரூ.5, மட்டுமே செலுத்த வேண்டும். இதற்கான வாகன நிறுத்த இடங்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வாகன நிறுத்தம் கட்டணத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அத்துடன் சென்னை மாநகராட்சியில் எங்கெல்லாம் பார்க்கிங் செய்ய கட்டணம் வசூலிக்கப்படும், அதாவது மாநகராட்சி சார்பில் எங்கெல்லாம் பார்க்கிங் வசதி உள்ளது என்பதுகுறித்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பட்டியலில் சென்னை மாநகராட்சியின் முக்கியமான 80 பகுதிகள் இடம் பெற்றுள்ளன.
அடையாறில் 4 இடங்களிலும், அம்பத்தூரில் 3 இடங்களிலும், பல்பர் ரோட்டில் 2 இடங்களிலும் கட்டண பார்க்கிங் வசதி உள்ளது.
அண்ணா நகரில் 8 இடங்களிலும், அசோக் நகரில் 3 இடங்களிலும், பெசன்ட் நகரில் 5 இடங்களிலும், திருவல்லிக்கேணியில் 3 இடங்களிலும், திநகர் ஜிஎன்செட்டி ரோட்டில் ஒரு இடத்திலும், மெரினா கடற்கரையில் ஒரு இடத்திலும், மயிலாப்பூரில் இரண்டு இடத்திலும், என்எஸ்சி போஸ் சாலையில் ஒரு இடத்திலும், நுங்கம்பாக்கத்தில் 3 இடத்தில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படும்.
பாரிஸில் 4 இடங்களிலும், பீட்டர்ஸ் ரோட்டில் ஒரு இடத்திலும். ராஜாஜி சாலையில் ஒரு இடத்திலும், புரசைவாக்கத்தில் இரண்டு இடத்திலும், தியாகராய நகரில் 13 இடங்களிலும், நடேசன் பார்க் (திநகர்) 4 இடங்களிலும், நரசிம்மன் சாலையில் ஒரு இடத்திலும், தேனாம்பேட்டையில் 11 இடங்களிலும் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படும். வடபழனியில் ஒரு இடத்திலும், சௌத் கேனல் பேங்க் ரோட்டில் இரண்டு இடத்திலும், எழும்பூரில் ஒரு இடத்திலும், மௌண்ட் ரோட்டில் ஒரு இடத்திலும்,கீழ்பாக்கம் கார்டில் ஒரு இடத்திலும் வாகனங்களை பார்க்கிங் செய்ய கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதில் தியாகராயா சாலை, பாண்டி பஜார் தவிர மற்ற வாகன நிறுத்த இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு நான்கு சக்கர வாகனங்களுக்கு கட்டணம் ரூ.20, இரண்டு சக்கர வாகனங்களுக்கு கட்டணம் ரூ.5, மட்டுமே செலுத்த வேண்டும் என்று சென்னைமாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் கட்டண வாகன நிறுத்த இடங்கள் பட்டியல் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications