விஜய் காலில் விழுந்து கதறினேன்.. பிரயோஜனம் இல்லை.. எல்லாத்துக்கும் புஸ்சி தான் காரணம்.. அஜிதா ஆக்னல்
சென்னை: சென்னையில் நடைப்பயிற்சி சென்ற போது விஜய்யின் காலில் விழுந்து கதறினேன் ஆனாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை. இறுதியாக அவரைச் சந்திக்க முயன்றபோது அவர் காரின் கண்ணாடியைக் கூட இறக்காமல் சென்றது தனக்கு மிகுந்த மனவேதனையையும் உயிர் பயத்தையும் ஏற்படுத்தியது என்று தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த அஜிதா ஆக்னல் கூறியுள்ளார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல் அண்மையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். இதையடுத்து இன்று திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அஜிதா ஆக்னல் அடுக்கடுக்கான புகார்களை கூறினார். எல்லாத்திற்கும் புஸ்சி ஆனந்த் தான் காரணம் என்றும் அவர் குற்றச்சாட்டு வைத்தார். அஜிதா ஆகன்ல் கூறியதாவது:-

பெரிய அவமானம் இழைக்கப்பட்டது
தமிழக வெற்றிக் கழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தீவிரமாகப் பணியாற்றி வந்தேன். ஆனால் கட்சியின் தலைமை மற்றும் நிர்வாகச் செயல்பாடுகள் சரியில்லை. தனது குடும்பமே நீண்டகாலமாகத் தலைவர் விஜய் அவர்களின் ரசிகர் மன்றப் பணிகளில் ஈடுபட்டு வந்தது. அவரது அழைப்பின் பேரில் தனது அரசுப் பணியைக் கூடப் பொருட்படுத்தாமல் கட்சிப் பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டேன்.
கட்சியில் பெண்களுக்கு உரிய அங்கீகாரமும் பாதுகாப்பும் இல்லை. மாவட்ட நிர்வாகியாக இருந்தும் தான் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டேன். குறிப்பாக, கல்வித் திருவிழாவின் போது தலைவர் தன்னுடன் பேசிக்கொண்டிருந்த நேரலையை உள்நோக்கத்துடன் துண்டித்தது தனக்கு பெரிய அவமானம் இழைக்கப்பட்டது. தனது உழைப்பிற்கான அங்கீகாரத்தைக் கோரி பலமுறை தலைவரைச் சந்திக்க முயன்றேன். ஆனால் அது மிகவும் கடினமான ஒன்றாகவே இருந்தது.
விஜய்யின் காலில் விழுந்தேன்
இறுதியில் ஒரு நாள் தலைவர் விஜய் அவர்களின் நடைப்பயிற்சி நேரங்களில் அவரைச் சந்தித்துத் தனது கோரிக்கைகளை முன்வைத்தேன். அப்போது ஒருகட்டத்தில் அவரது காலில் விழுந்து கண்ணீர் மல்க நீதி கேட்டேன்.. ஆனால், அதற்கு உரியப் பதில் கிடைக்காததுடன், இறுதியாக அவரைச் சந்திக்க முயன்றபோது அவர் காரின் கண்ணாடியைக் கூட இறக்காமல் சென்றது தனக்கு மிகுந்த மனவேதனையையும் உயிர் பயத்தையும் ஏற்படுத்தியது.
பணத்திற்காக இயங்கவில்லை
கட்சியில் பதவிகள் வழங்கப்படுவதில் முறைகேடுகள் நடப்பதாகவும், உண்மையாக உழைப்பவர்களுக்கு மதிப்பு இல்லை. தன்னைப் பற்றித் தவறான வதந்திகள் பரப்பப்பட்ட நிலையில், தனது களப்பணியைக் கவனித்த திமுக தலைமை தமக்கு அழைப்பு விடுத்தது. பணத்திற்காகவோ அல்லது பதவிக்காகவோ தான் இயங்கவில்லை. தனது சமூகத்தின் அடையாளத்திற்காகவும் மக்கள் சேவைக்காகவும் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தேன்.
இனிவரும் காலங்களில் தமிழகத்தின் கடலோரக் கிராம மக்களின் உரிமைகளுக்காகவும், அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்காகவும் திமுகவில் இணைந்து உண்மையாகப் பணியாற்றுவேன்.. என்று கூறியுள்ளார்.
-
TASMAC: பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் ஏன்? யார் யாருக்கு லஞ்சம் போகிறது தெரியுமா? முழு லிஸ்டடால் ஷாக் -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
தூயசக்தி விஜய்.. மின் வெட்டுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி -
தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? விஜய் டிக் அடிக்கும் அந்த நேர்மையான அதிகாரி! வெளியான தகவல் -
நிலாவைக் காட்டி சோறூட்டுற மாதிரி.. விஜய்யை காட்டிய ஆதவ்! ஜான் போட்ட ’வார் ரூம்’ கணக்கு! பக்கா ப்ளான்! -
“15 நாட்களில் 266 குற்றங்கள்!”.. விஜய் அரசை கடுமையாக தாக்கிய நயினார் நாகேந்திரன் -
8 கிராம் தங்கம் + பட்டுப் புடவை திட்டம்.. தவெக அரசு திருமண உதவித் திட்டம் விரைவில் தொடக்கம் -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
இது அப்பட்டமான விதிமீறல்.. மேகதாது அணை கட்ட கர்நாடகாவை அனுமதிக்க கூடாது.. மோடிக்கு விஜய் கடிதம்












Click it and Unblock the Notifications