சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அண்ணாமலையுடன் அலிசா அப்துல்லா.. பாஜகவில் இணைந்த பெண் கார் “ரேசர்”! கட்சியில் சேர்ந்தது ஏன் தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: பிரபல கார், பைக் ரேசரும், சினிமா நடிகையுமான அலிசா அப்துல்லா அண்ணாமலை முன்பாக தன்னை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டார்.

தமிழ்நாடில் பாரதிய ஜனதா கட்சியை வளர்ப்பதற்கு பல்வேறு உத்திகளை கையில் எடுத்து வருகின்றனர். அதன் படி பல்வேறு துறைகளில் பிரபலமானவர்கள் கட்சியில் இணைக்கப்பட்டு வருகின்றனர்.

பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி சினிமா சின்னத்திரை நடிகர்கள், விளையாட்டுத் துறையினர், சமூக வலைதளங்கள் பிரபலமாக இயங்கி வருபவர்கள் என பலருக்கு பாஜக தூதுவிட்டு அவர்களை கட்சியில் இணைத்து வருகிறது.

”அண்ணாமலை நிச்சயமாக யூதாஸ் தான்” இது அனைவருக்கும் தெரியும்.. சீனுக்குள் வந்த மனோ தங்கராஜ்! ”அண்ணாமலை நிச்சயமாக யூதாஸ் தான்” இது அனைவருக்கும் தெரியும்.. சீனுக்குள் வந்த மனோ தங்கராஜ்!

பாஜகவில் நடிகர்கள்

பாஜகவில் நடிகர்கள்

அந்த வகையில் தமிழகத்தில் சினிமா துறையை சேர்ந்த ராதாரவி, கவுதமி, காயத்ரி ரகுராம், எஸ்.வி.சேகர், ஆர்.கே.சுரேஷ், பொன்னம்பலம், மதுவந்தி, நமிதா என பலர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து இருக்கின்றனர். இவர்களில் ஒரு சிலரே தற்போது தீவிரமாக கட்சியில் செயல்பட்டு வருகின்றனர்.

பாஜகவில் அலிசா அப்துல்லா

பாஜகவில் அலிசா அப்துல்லா

இந்த நிலையில் இன்று பிரபல கார் மற்றும் பைக் பந்தைய வீராங்கனையான அலிஷா அப்துல்லா பாஜகவில் இணைந்து இருக்கிறார். சென்னையில் நடந்த விழாவில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, துணை தலைவர் வி.பி.துரைசாமி மற்றும் பாஜக பிரமுகர்கள் முன்னிலையில் அலிசா அப்துல்லா பாஜகவில் இணைந்தார். அவருக்கு அண்ணாமலை பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

ஏன் பாஜக?

ஏன் பாஜக?

இதுகுறித்து வீராங்கணை அலிசா அப்துல்லா ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, 'தமிழ்நாடு பாஜக குடும்பத்தில் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு அண்ணாமலையும் அமர்பிரசாத் ரெட்டியும் அளித்த மரியாதை மற்றும் அங்கீகாரம் காரணமாகவே நான் பாஜகவில் இணைந்து இருக்கிறேன். பெண்களின் முன்னேற்றத்துக்காக என்னால் இயன்றதை செய்வேன்.' என்று அவர் உறுதியளித்துள்ளார்.

அண்ணாமலை வாழ்த்து

அண்ணாமலை வாழ்த்து

இதுகுறித்து அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாவது, "விளையாடுத்துறையின் உண்மையான ஜாம்பவான், அற்புதமான போட்டி வீரர், செல்வி அலிசா அப்துல்லாவை பாஜகவுக்கு வரவேற்பதில் மகிழ்கிறேன். ஆண்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் விளையாட்டுத்துறையில் தடைகளை உடைத்து ஊக்கமளிக்கும் பெண்ணாக இருக்கிறார். விளையாட்டில் அவர் முத்திரை பதித்துள்ளார். விளையாடுத்துறைக்கு பிரதமர் மோடி ஆற்றி வரும் பணியை கண்டு அவர் பாஜகவில் இணைந்துள்ளார்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

English summary
Female bike and car racer Alisha Abdullah joined in BJP: பிரபல கார், பைக் ரேசரும், சினிமா நடிகையுமான அலிசா அப்துல்லா அண்ணாமலை முன்பாக தன்னை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X