அவரிடம் பேச கூடாது.. கூட்டணி கட்சிகளை கண்டித்த ஸ்டாலின்.. திமுக கூட்டணியில் எழுந்த புது பிரச்சனை?

உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக கூட்டணிக்குள் சில மனக்கசப்புகள் ஏற்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக கூட்டணிக்குள் சில மனக்கசப்புகள் ஏற்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள். இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அதே சமயம் புதிதாக உருவாக்கப்பட்ட, பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் வேறு தேதிகளில் நடக்கும்.

இதற்காக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது. விரைவில் திமுக மற்றும் அதிமுக தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

திமுக வழக்கு

திமுக வழக்கு

இந்த நிலையில் ஒரு பக்கம் உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக திமுக வழக்கு தொடுத்து சட்ட போராட்டம் நடத்தி வருகிறது. தேர்தலுக்கு முன் எப்படியாவது அதை நிறுத்த வேண்டும் என்று திமுக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில்தான் இன்னொரு பக்கம் திமுக கூட்டணிக்கு உள்ளேயே தற்போது சில பிரச்சனைகள் எழுந்துள்ளது.

முக்கிய தலைவர்

முக்கிய தலைவர்

அதன்படி திமுக கூட்டணியில் இருக்கும் ஒரு முக்கிய தலைவர் அதிமுக கூட்டணியுடன் நெருக்கமாகி வருவதாக கூறப்படுகிறது. சில பாஜக தலைவர்களுடனும் அவர் பேசி வருகிறாராம். நாடாளுமன்றத்திலும் கூட அந்த தலைவர்கள் தற்போதெல்லாம் அடிக்கடி பாஜக - அதிமுக தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.

ஸ்டாலின் எப்படி

ஸ்டாலின் எப்படி

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு புகார் சென்றுள்ளது. அந்த முக்கிய கட்சி திமுக கூட்டணியில் இருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியேற வாய்ப்புள்ளது. அதனால் இப்போதே அவர்களுடன் பேச வேண்டும். இல்லையென்றால் உள்ளாட்சி தேர்தலின் போது சிக்கல் ஏற்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

என்ன பேசினார்

என்ன பேசினார்

இதனால் கூட்டணி தலைவர்களுடன் இரண்டு நாட்களுக்கு முன் பேசிய ஸ்டாலின், கூட்டணி மாறும் திட்டம் இருந்தால் இப்போதே செய்துவிடுங்கள் என்று கோபமாக கூறி இருக்கிறார். அதோடு திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என்றால் அதிமுகவை சேர்ந்த தலைவர்களுடன் பேசுவது கூடாது. குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

எங்கு இடம்

எங்கு இடம்

மேலும் உள்ளாட்சி தேர்தலில் இடம் ஒதுக்குவது தொடார்பாகவும் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி உள்ளார். ஸ்டாலின் அளிப்பதாக கூறிய இடங்களுக்கு கூட்டணி கட்சிகள் ஒப்புக்கொண்டு இருக்கிறது. அதனால் விரைவில் உள்ளாட்சி தேர்தலுக்காக திமுக பிரச்சாரத்தை தொடங்கும் கூறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+