பிகில் விவகாரம்...நடிகர் விஜய் வீட்டில் 2 நாட்களாக நீடித்த வருமான வரி சோதனை நிறைவு
நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடந்து வரும் நிலையில், அவரின் வீட்டிற்கு கூடுதலாக வருமான வரித்துறை அதிகாரிகள் வருகை புரிந்துள்ளனர்.
Recommended Video
சென்னை: நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற வருமான வரி சோதனைகள் தற்போது நிறைவடைந்துள்ளன
நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை இன்று 2-வது நாளாக சோதனை நடத்தியது. பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்தில் நேற்று காலையில் இருந்து வருமான வரித்துறை சோதனை நடந்து வந்தது.
பிகில் பட வசூலை மையமாக வைத்து இந்த வருமான வரித்துறை சோதனை நடக்கிறது.இதனிடையே, நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிபில் இருந்த நடிகர் விஜயிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர்.

எத்தனை அதிகாரிகள்
விஜய் வீட்டில் தற்போது முதலில் 6 அதிகாரிகள் சோதனை நடத்தி னர் நேற்று மாலையில் இருந்து இவர்கள் இன்று சோதனை நடத்தினர். மொத்தமாக விஜய் வீட்டை சல்லடை போட்டனர். அங்கிருந்து ஆவணங்கள் அனைத்தையும், எடுத்து உள்ளனர். முக்கியமாக பிகில் படத்திற்கு வாங்கிய சம்பளம் தொடர்பான செக்குகளை வாங்கி உள்ளனர்.

பிகில் படம்
பிகில் படம்தான் முழுக்க முழுக்க இந்த சோதனைக்கு காரணம் என்கிறார்கள். பிகில் படம் நினைத்ததை விட அதிகமாக வசூல் வாங்கியுள்ளது. கடந்த வருடம் அதிக வசூல் வாங்கிய படத்தில் இது நம்பர் 1 என்றும் தகவல்கள் வருகிறது. 350 பிளஸ் கோடி ரூபாயை இந்த படம் சம்பாதித்து இருக்கலாம். இதில் கணிசமான தொகை விஜய்க்கு சம்பளமாக அளிக்கப்பட்டு இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள் .

என்ன சோதனை
இதுதான் இந்த சோதனைக்கு காரணம் என்கிறார்கள். இந்த நிலையில் அவரின் வீட்டிற்கு கூடுதலாக அதிகரிகள் வருகை தந்தனர். முக்கியமான சில விஷயங்களை விசாரிக்க வேண்டும் என்பதற்காக கூடுதலாக அதிகாரிகள் வந்தனர். இவர்கள் விஜயின் ஆடிட்டரிடம் வரி விதிப்பு தொடர்பு சில விஷயங்களை கேட்க வந்தனர் என்கின்றனர்.

ரெய்டு எப்படி
அதே சமயம் இந்த ரெய்டு காரணமாக விஜய்க்கு எந்த பிரச்சனையும் இல்லை. இந்த ரெய்டு முழுக்க முழுக்க ஏஜிஎஸ் சினிமாஸ், அன்புச்செழியன் ஆகியோரால்தான் நடக்கிறது. அவர்களிடம் செய்யப்பட்ட சோதனை தொடர்பாகவே விஜயை விசாரித்தனர் என்கிறார்கள். ஏஜிஎஸ் சினிமாஸ், அன்புச்செழியன் வீடுகளில் இருந்து கணக்கில்வராத ரூ.80 கோடி பறிமுதல்செய்யப்பட்டது.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன்












Click it and Unblock the Notifications