மொத்தமாக 4 பேர்.. அதிமுக அடிமடியிலேயே கைவைத்த திமுக.. காலியாகும் "அந்த" கூடாரம்.. ஸ்டாலினின் மூவ்!?
சென்னை: பல்வேறு மாற்று கட்சியினர் வரிசையாக திமுகவில் இணைந்து வரும் நிலையில், இந்த வாரமும் திமுகவில் சில முக்கிய நிர்வாகிகள் இணைய இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அதிமுகவிற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் முக்கியமான சில நிர்வாகிகள் திமுகவில் இணைய உள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னாள் துணை தலைவர் மகேந்திரன் கடந்த 3 நாட்களுக்கு முன் திமுகவில் இணைந்தார். கொங்கு மண்டலத்தில் திமுகவை வலுப்படுத்தும் விதமாக அவர் கட்சியில் இணைந்தார். அதே நாள் மநீம பத்ம பிரியாவும் திமுகவில் இணைந்தார்.
இன்னொரு பக்கம் நெல்லை மேயராக இருந்த முன்னாள் அதிமுக ராஜ்யசபா எம்பி விஜிலா சத்யானந்தும் தற்போது திமுகவிற்கு வந்துள்ளார். திமுக வரிசையாக பல்வேறு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுத்து வருகிறது.

நிர்வாகிகள்
இந்த நிலையில்தான் இன்னொரு பக்கம் கரூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள அதிமுகவினரை செந்தில் பாலாஜி வேகமாக திமுகவில் இணைந்து வருகிறார். கரூரில் இருந்த கிட்டத்தட்ட 10 அதிமுக கவுன்சிலர்களை, அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த வாரம் திமுகவில் இணைய வைத்தார். கொங்கு மண்டலத்தில் வரிசையாக திமுகவில் அதிமுகவினர் ஐக்கியம் ஆகி வருகிறார்கள்.

ஐக்கியம்
இது போக பெருந்துறையை சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம் இன்று திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. ஈரோட்டில் அதிமுகவின் வலுவான தலைவர்களில் ஒருவராக இருந்த தோப்பு வெங்கடாச்சலம் இன்று திமுகவில் இணைவதாக தகவல்கள் வருகின்றன. இது அதிமுகவிற்கு பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது.

அதிமுக
இந்த நிலையில் அதிமுகவை சேர்ந்த 4 முன்னாள் எம்எல்ஏக்கள் இந்த வாரம் திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. ஈரோடு மற்றும் சேலத்தை சேர்ந்த 4 முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் மொத்தமாக திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதிலும் சேலத்தில் அதிமுகவின் முக்கிய முகமாக இருந்த முன்னாள் எம்எல்ஏக்கள் இந்த வாரமே திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

கூடாரம்
உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக அதிமுகவின் அஸ்திவாரத்தை கொங்கு மண்டலத்தில் காலி செய்யும் வகையில் திமுக நிர்வாகிகள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கரூரில் அதிமுக நிர்வாகிகள் பலர் திமுக பக்கம் சென்றுவிட்ட நிலையில், இன்னொரு பக்கம் தற்போது சேலம் அதிமுக நிர்வாகிகளும் திமுக வசம் செல்ல வாய்ப்புள்ளது என்கிறார்கள். சேலம் அதிமுகவின் ஸ்டிராங் சோன்களில் ஒன்றாகும்.

உள்ளாட்சி தேர்தல்
முதல்வர் ஸ்டாலின் தற்போது உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து காய் நகர்த்தி வருகிறார். திமுகவில் திடீரென பல நிர்வாகிகள் இணைய இதுவே காரணம். உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களையும், மேயர் உள்ளிட்ட பதவிகளையும் கைப்பற்றும் திட்டத்தில் திமுக உள்ளது. இதனால் அதற்கு ஏற்றபடி திமுகவில் முக்கிய நிர்வாகிகள் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
சப்ஜெக்ட்டுக்கு உயிர் வந்துருச்சு.. திருச்சி கிழக்கில் கமலை இறக்குங்க! திடீரென குரல் கொடுக்கும் மநீம












Click it and Unblock the Notifications