திமுக அதிமுக இடையே 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் கடும் போட்டி.. எங்கெல்லாம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக அதிமுக இடையே 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் கடும் போட்டி நிலவுகிறது. அவற்றின் விவரத்தை இப்போது பார்ப்போம்.

கோவை வடக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன்.கே.அர்ஜுனன், திமுக வேட்பாளர் ஷண்முகசுந்தரத்தை விடவும் கூடுதலாக 922 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார். .ஈரோடு மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் முத்துசாமி, அதிமுக வேட்பாளர் ராமலிங்கத்தை காட்டிலும் 856 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

ஜெயங்கொண்டம் தொகுதியில் திமுக வேட்பாளர் கண்ணன், பாமகவின் பாலுவை காட்டிலும் 419 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
கலசப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் சரவணன், அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்தை காட்டிலும் வெறும் 269 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

கரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம். ஆர். விஜயபாஸ்கர் மற்றும் திமுக வேட்பாளர் செந்தில் பாலஜிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவருக்கும் இடையே 300 வாக்குகள் அளவில் மாறி மாறி வித்தியாசம் வருகிறது. கன்னியாகுமரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆஸ்டின் 722 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். அதிமுகவின் தளவாய் சுந்தரம் பின்னடைவை சந்தித்து உள்ளார்.

அரவக்குறிச்சி

அரவக்குறிச்சி

அணைக்கட்டு தொகுதியில் அதிமுக வேட்பாளர் வேலழகனை காட்டிலும் திமுக வேட்பாளர் நந்தகுமார் வெறும் 194 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே முன்னிலை வகிக்கிறார். வேலழகன் 26220 வாக்குகளை பெற்றுள்ளார். நந்தகுமார் 26414 வாக்குகளை பெற்றுள்ளார். அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமையை காட்டிலும் திமுக வேட்பாளர் இளங்கோ 583 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். இளங்கோ தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வருகிறார். புவனகிரி தொகுதியில் திமுக வேட்பாளர் அருண்மொழித்தேவன், திமுக வேட்பாளர் சரவணன் துரையை காட்டிலும் வெறும் 866 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

கிருஷ்ணராயபுரம்

கிருஷ்ணராயபுரம்

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் கீதா 864 வாக்குகள் முன்னிலை பெற்று அதிமுக வேட்பாளர் முத்துக்குமாரை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
மதுராந்தகம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மரகதம், திமுக வேட்பாளர் சத்யாவை காட்டிலும் 809 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார்.
மணப்பாறை தொகுதியில் திமுக வேட்பாளர் அப்துல் சமாத், அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை காட்டிலும் 517 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
மேட்டுப்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் செல்வராஜ், திமுக வேட்பாளர் ஷண்முகசுந்தரத்தை காட்டிலும் 230 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர்

மொடக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் சுப்புலக்ஷ்மி ஜகதீசன், பாஜக வேட்பாளர் சரஸ்வதியை 190 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். முதுகுளத்தூர் தொகுதியில் அதிமுகவின் கீரத்திக்கா, திமுகவின் ராஜகண்ணப்பனை காட்டிலும் 721 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

பழனி தொகுதி

பழனி தொகுதி

நன்னிலம் தொகுதியில் திமுகவின் ஜோதிராமன், அதிமுகவின் காமராஜை காட்டிலும் 292 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். ஒட்டப்பிடாரம் தொகுதியில்
திமுக, அதிமுகவை விட 391 வாக்குகள் முன்னிலை வகிக்கிறது. பழனி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் குமார், அதிமுகவின் ரவி மனோகரனை 261 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

சைதாப்பேட்டை

சைதாப்பேட்டை

புதுக்கோட்டையில் திமுக, அதிமுகவை 811 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது. ராசிபுரத்தில் அதிமுக, திமுகவை 579 வாக்குகள் வித்தியாசத்தில் முந்தியுள்ளது. பெருந்துறை தொகுதியில் அதிமுகவின் ஜெயக்குமார் வெறும் 113 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ள திமுகவின் பாலுவை முந்தியுள்ளார். பொன்னேரியில் காங்கிரஸ், அதிமுகவை 242 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது. சைதாப்பேட்டையில் திமுக, அதிமுகவை விட 801 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது. சாத்தூர் தொகுதியில் திமுக 340 வாக்குகள் அதிமுகவை காட்டிலும் முன்னிலை பெற்றுள்ளது. சோழிங்கநல்லூர் தொகுதியில் திமுக, அதிமுகவை 127 வாக்குகளில் முந்தியுள்ளது. சீர்காழி தொகுதியில் திமுக 123 வாக்குகளில் முந்தியுள்ளது. தென்காசியில் வெறும் 53 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. திருவிடைமருதூரில் அதிமுக 501 வாக்குகளில் திமுகவை முந்தியுள்ளது. வேதாரண்யத்தில் திமுக 593 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+