முக்கிய துறைகளுக்கு இன்னும் நியமிக்கப்படாத அமைச்சர்கள்! தேங்கி கிடக்கும் கோப்புகள்! தீர்வு எப்போது!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் தமிழகத்தில் புதியதாக ஆட்சி அமைந்திருக்கிறது. ஒரு வாரத்திற்கு முன்னரே அமைச்சர்கள் பொறுப்பேற்றுக்கொண்டாலும், நேற்றுதான் அவர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டன. இருப்பினும் இன்னும் பல முக்கிய துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படாமல் இருக்கிறது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. இருப்பினும் பெரும்பான்மைக்கான இடங்கள் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார்.

அவர் பதவியேற்றபோது அவருடன் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், வெங்கட்ரமனன், கீர்த்தனா, ராஜ்மோகன், பிரபு உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். ஆனால் தற்போதுதான் அவர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
முதலமைச்சர் விஜய் - காவல், உள்துறை, பொது நிர்வாகம்
ஆனந்த் - ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை
ஆதவ் அர்ஜுனா - பொதுப்பணித்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை
அருண் ராஜ் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
கே.ஏ.செங்கோட்டையன் - நிதித்துறை
வெங்கட்ரமணன் - உணவுத்துறை
சி.டி.ஆர். நிர்மல்குமார் - மின்சாரம் மற்றும் சட்டத்துறை
ராஜ்மோகன் - பள்ளிக்கல்வித்துறை
டி.கே.பிரபு - கனிமவளத்துறை
கீர்த்தனா - தொழிற்துறை
என 9 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். தமிழக சட்டமன்றத்தை பொறுத்தவரை மொத்தம் 234 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஒரு மாநிலத்தின் மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கையில் 15 சதவிகிதம் வரை அமைச்சர்கள் நியமிக்கப்படலாம்.
அதன்படி தமிழகத்திற்கு முதலமைச்சரை சேர்த்து 35 எம்எல்ஏக்கள் நியமிக்கப்படலாம். அந்த வகையில் இன்னும் 25 அமைச்சர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
வேளாண்துறை
நெடுஞ்சாலை துறை
போக்குவரத்துத் துறை
உயர் கல்வித்துறை
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
இந்து சமய அறநிலையத்துறை
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை
கூட்டுறவுத் துறை
வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை
கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை
தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை
கைத்தறி, கைவினைப்பொருட்கள், துணிநூல் மற்றும் கதர்துறை
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
சுற்றுலா துறை
செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை
தமிழ் வளர்ச்சித்துறை
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை
சிறுதொழில் மற்றும் குறு நிறுவனங்கள் துறை
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை
அரசு அச்சகம் மற்றும் எழுதுபொருள் துறை
ஆகிய துறைகளுக்கு இன்னும் அமைச்சர்கள் நியமிக்கப்படாமல் இருக்கின்றனர். இந்த துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டால்தான் துறை சார்ந்த வளர்ச்சி இருக்கும். எனவே எப்போது அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
வாழ்க்கை ஒரு வட்டம் சார்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ.. தவெக தொண்டர்களின் மீம்ஸ்! -
கட்சி தொடங்கி ஆட்சியை பிடிக்கப்போகிறாரா தாடி பாலாஜி.. லட்சிய ஜனநாயக கட்சியிலிருந்து விலகல் -
"சுடுகாடு பக்கத்துல டாஸ்மாக் வையுங்க CM சார்!" – விஜய்யிடம் பார்த்திபனின் 'சைக்கலாஜிக்கல்' அஸ்திரம் -
இவ்வளவு ஆதரிச்சதே அதிகம்.. இன்னும் கொஞ்சம் வேணுமாம்! அரசியல் பேரிடர்.. விஜய்யை இறங்கி அடித்த சீமான் -
இரக்கமே காட்டாதீங்க.. கேஸை போடுங்க.. திமுக மாஜி அமைச்சர்களுக்கு விஜய் செக்.. வரிசையாக ஆக்சன் -
வேற லெவலில் விஜய் செய்த சம்பவம்! ஒரே நேரத்தில் 300 பேருக்கு ப்ரோமோஷன்! வரலாற்றில் முதன்முறையாமே! -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திருப்பரங்குன்றம் தீபம்.. தவெக அரசின் நிலைப்பாடு.. ஓபனாக பேசிய சிபிஎம்! முக்கிய டிமாண்ட்!











Click it and Unblock the Notifications