கால்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக்.. அதை பார்க்க கதாநாயகியாக நடித்த சித்ரா இல்லையே.. படக்குழுவினர் கண்ணீர்
சென்னை: கால்ஸ் என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகவுள்ள நிலையில் அதில் கதாநாயகியாக நடித்த சித்ரா உயிருடன் இல்லாதது படக்குழுவினரை வேதனை அடையச் செய்துள்ளது.
தனது துருதுரு நடிப்பால் ரசிகர் பட்டாளத்தால் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டவர் நடிகை விஜே சித்ரா. இவர் கடந்த வாரம் ஒரு ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவரது மரணம் தற்கொலை என பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியானது. இதையடுத்து அதற்கு காரணம் என்ன என்பது குறித்து போலீஸார் அவரது கணவர் ஹேம்நாத், குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காமெடி
நிகழ்ச்சி தொகுப்பாளினி, சீரியல் நடிகை, மாடல், காமெடி குயின் என பல்வேறு திறமைகளில் கொடிக் கட்டி பறந்த சின்னத்திரை சித்ராவின் திறமையை வெள்ளித்திரையும் தற்போது பயன்படுத்திக் கொண்டுள்ளது. ஆம், சித்ரா கதாநாயகியாக நடித்த கால்ஸ் என்ற படத்தின் டீசர் இன்று காலை வெளியாகிறது.

முழுவீச்சில்
Infinite pictures தயாரிப்பில் கால்ஸ் திரைப்படத்தை சில மாதங்களுக்கு முன்பு நடிகர் டெல்லி கணேஷ், பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். தஞ்சாவூர், திருச்சி, சென்னை மற்றும் காசி என பல இடங்களில் நடந்த படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

கொரோனா பாதிப்பு
இதில் விஜே சித்ரா கதாநாயகியாக நடிக்க, டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன், தேவதர்சினி, வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, சிரீரஞ்சனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ஜெ.சபரீஸ் இயக்கியுள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்ட திரையரங்கள் மீண்டும் திறக்கப்பட்டதும் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தான் இன்று காலை 11 மணிக்கு கால்ஸ் திரைப்படத்தின் First look வெளியிடப்பட இருக்கிறது.

ரசிகர்கள்
நிகழ்ச்சி தொகுப்பாளர், சீரியல் நடிகை என சிரித்த முகத்துடன் பரம்பரமாக சுழன்று பணியாற்றிக்கொண்டிருந்த சித்ரா, அவர் நடித்த திரைப்படம் குறித்த மகிழ்ச்சியான செய்தி வெளியாகும் சூழலில் அவர் இல்லாதது படக்குழுவினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications