அவ்வளவு தான் முடிஞ்சது SIR.. பிப்ரவரி 17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல்! வெளியான அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நவம்பர் நான்காம் தேதி தொடங்கி நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில் பிப்ரவரி 17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்னாயக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்," இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, கணக்கீட்டு கட்டத்தின் போது கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பித்த வாக்காளர்களின் பெயர்களை உள்ளடக்கிய வரைவு வாக்காளர் பட்டியல் 19 டிசம்பர், 2025 அன்று வெளியிடப்பட்டது.

19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் 19.12.2025 முதல் 30.01.2026 வரையிலான காலகட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத குடிமக்கள் மற்றும் 18 வயது நிரம்பிய தகுதியுடைய வாக்காளர்கள் தங்கள் பெயரை பதிவுசெய்ய படிவம்-6ஐ நிரப்பி உறுதிமொழி படிவத்துடன் (Declaration Form) விண்ணப்பித்துள்ளனர். முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சேபணை தெரிவிக்க அல்லது ஏற்கனவே உள்ள பதிவை நீக்க படிவம்-7ஐ சமர்ப்பித்துள்ளனர்.
முகவரி மாற்றுதல் / ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய / வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) மாற்றம் செய்ய / மாற்றுத் திறனாளி (PwDs) வாக்காளர்கள் என குறிப்பது ஆகிய கோரிக்கை உடையவர்கள் படிவம்-8 மூலம் விண்ணப்பித்துள்ளனர். 19.12.2025 முதல் 30.1.2026 வரையிலான ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், பின்வரும் எண்ணிக்கையிலான படிவங்கள் நேரடியாக பெறப்பட்டுள்ளன.
மேலும், இதே காலகட்டத்தில் பின்வரும் எண்ணிக்கையிலான இணையவழி படிவங்களும் பெறப்பட்டுள்ளன. பெறப்பட்ட 34,75,717 விண்ணப்பங்களும் (நேரடி மற்றும் இணையவழி) மாவட்ட அளவில் தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்கள் (ERO) மூலம் செயலாக்கப்பட்டு, அதன் பின்னர், இறுதி வாக்காளர் பட்டியல் 17 பிப்ரவரி 2026 அன்று வெளியிடப்படும்" என கூறப்பட்டுள்ளது.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications