சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இறுதி வாக்காளர் பட்டியல்... குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதி எது தெரியுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தின் இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு- வீடியோ

    சென்னை: சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் ரிப்பன் மாளிகையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

    தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 2018 செப்டம்பர் ஒன்றாம் தேதி படி சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 37,92,126 பேர் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 18,71,638, பெண்கள் 19,19,582 இதரர் 906 அடங்குவர்.

    Final voter list release at Ribbon House In Chennai

    2019 ஆம் ஆண்டு சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக 1,16,385 பெயர் சேர்த்தல் மனுக்கள் பெறப்பட்டு 1,11,104 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது.

    பின்னர், பல்வேறு சீர்திருத்தங்களுக்குப் பிறகு இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 18,83,989 ஆண்கள், 1934078 பெண்கள், 932 இதரர் என மொத்தம் 38,18,999 வாக்காளர்கள் உள்ளனர்.

    இது கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் எண்ணிக்கையை விட 26873 (0.71%) அதிகம். இதில் துறைமுகம் தொகுதி குறைவான (166515) வாக்காளர்களையும், வேளச்சேரி அதிகமாக (296952) வாக்காளர்களையும் கொண்டுள்ளது.

    இறுதி வாக்காளர் பட்டியலில் 18 வயதுக்கு மேற்பட்ட புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 43,829. புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை உடனடியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Chennai Corporation Commissioner Karthikeyan released the final voter list at Ribbon House.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X