SIR-க்கு பின் 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பேட்டி
சென்னை: தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆர் பணிகள் நிறைவடைந்து தமிழ்நாட்டில் மொத்தம் 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை, தேர்தல் ஆணையம் 2025ல் துவக்கியது. எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை நடந்தது. இந்தப் பணிகள் தொடங்கப்படுவதற்கு முன்பு, 2025 அக்டோபர் மாத நிலவரப்படி, தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.

சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது, இறந்தவர்கள், இரட்டை பதிவு, முகவரி மாற்றம் போன்றவை கண்டறியப்பட்டு, அதில் உள்ள பெயர்கள் நீக்கப்பட்டன. அந்த வகையில், மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. தற்போது, 5.43 கோடி பேர் மட்டுமே பட்டியலில் இருந்தனர்.
வாக்காளர் திருத்தம்
இதை தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், முகவரி மாற்றம் செய்யவும், கடந்த 10 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பெயர் சேர்க்க 17.10 லட்சம் பேரும், நீக்கம் செய்ய 1.84 லட்சம் பேரும், திருத்தம் கோரி 5.51 லட்சம் பேரும் என மொத்தம் 24 லட்சத்த 47 ஆயிரம் பேர் வாக்காளர் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கியிருந்தனர்.
அதேபோல், இணையதளம் வழியாக 10 லட்சத்து 28 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆக மொத்தம் 34 லட்சத்து 75 ஆயிரத்து 717 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்நிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார். மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,67,07,380.
74 லட்சம் பேர் நீக்கம்
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு முன்பு 2025-ல் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில்,எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு பிறகான இறுதி வாக்காளர் பட்டியலில் 74.07 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, 5.67 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண் வாக்காளர்கள் - 2,77,38,925,
பெண் வாக்காளர்கள் - 2,89,60,838,
மூன்றாம் பாலினம் - 7,617 பேர்
அர்ச்சனா பட்நாயக் பேட்டி
சென்னை தலைமைச் செயலகத்தில், வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு பின் வரைவு வாக்காளர் பட்டியல் 19.12.2026 அன்று வெளியிடப்பட்டது. அதில், ஆண் வாக்காளர்கள்: 2,66,63,233, பெண் வாக்காளர்கள்: 2,77,06,332, மூன்றாம் பாலினத்தவர்: 7,191 என மொத்தம்: 5,43,76,756 வாக்காளர்கள் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்து இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில், ஆண்கள்: 2,77,38,925, பெண்கள்: 2,89,60,838, மூன்றாம் பாலினம்: 7617 என மொத்தம் 5,67,07,380 பெயர் இறுதி வாக்காளர் பட்டியலில் உள்ளன.
விண்ணப்பிக்கலாம்
வரைவு வாக்காளர் பட்டியலை காட்டிலும் இறுதி வாக்காளர் பட்டியலில் 23.30 லட்சம் வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆர். பணிக்கு பிறகு மொத்தம் 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மீண்டும் பெயர் சேர்க்க விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இன்று முதல் மீண்டும் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்களுக்கான விண்ணப்பங்களை (Form 6) பொதுமக்கள் வழங்கலாம். வாக்காளர்கள் தங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை தேர்தல் ஆணைய இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்துள்ள வாக்காளர்கள் தகுந்த ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் வாக்காளர் பட்டியலில் தங்களை இணைத்துக் கொள்ளலாம்.
இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் பிப்ரவரி 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார். அப்போது மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications