சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாக்காளர் பட்டியலில் நவம்பர் 16 முதல் பெயர் சேர்க்கலாம் - ஜனவரி 15ல் இறுதி வாக்காளர் பட்டியல் ரிலீஸ்

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நவம்பர் 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பெயர் சேர்ப்பது, முகவரி மாற்றம் செய

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினருக்கு முன்னதாக தேர்தல் ஆணையம் பரபரப்பாக தயாராகி வருகிறது. நவம்பர் 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் பெயர் சேர்ப்பது, முகவரி மாற்றம் செய்யலாம் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜனவரி 15ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் ரிலீஸ் ஆகும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் பெரிய கட்சிகளிடம் கூட்டணிக்கு துண்டு போட்டு தயாராகி விட்டனர். எந்த அணியில் எந்த கட்சி இணையும் என்று ஜனவரி வரை உறுதியாக சொல்ல முடியாது என்றாலும் தமிழக தேர்தல் ஆணையம் தேர்தலுக்கு தயாராகி வருகிறது.

Final voters list relase on January 15 says tate Election Commission

தமிழகத்தில் வரும் நவம்பர் 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் சேர்ப்பு மற்றும் வாக்காளர் பெயர் நீக்கம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனால், 2021ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். புதிதாக விண்ணப்பிக்க வயதை நிரூபிகப்பதற்கு பிறப்பு சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

என் தலைவனை பற்றி பேச என்ன தகுதி உள்ளது...? அமைச்சர் செல்லூர் ராஜூ மீது பாயும் நந்தகுமார் எம்.எல்.ஏ.என் தலைவனை பற்றி பேச என்ன தகுதி உள்ளது...? அமைச்சர் செல்லூர் ராஜூ மீது பாயும் நந்தகுமார் எம்.எல்.ஏ.

தமிழக வாக்காளர்கள் www.nvsp.in என்ற இணைய தளம் மூலம் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்த்தல், நீக்கம் செய்யலாம். VOTER HELP LINE என்ற செல்போன் ஆப் மூலமாகவும் வாக்காளர் பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கப் பணி டிசம்பர் 15ஆம் தேதி முடிவடைந்த பின்னர், 2021ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

Recommended Video

    தந்தை இறந்த சோகத்தில் கூட கடமை தவறாமல் செய்த Woman Inspector | Oneindia Tamil

    அப்புறம் என்ன நவம்பர் முதல் உங்க தொகுதியில் இருக்கிற இளம் வாக்காளர்களை கண்டுபிடித்து பெயரை சேருங்க அரசியல்வாதிகளே... நீங்களும் சீக்கிரம் தேர்தலுக்கு தயாராகுங்க.

    English summary
    The final voters’ list for the TamilNadu assembly election 2021 will be published on January 15, State Election Commission said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X