அப்படி போடு! 14 ஆண்டுகளாக முடங்கி கிடந்த திட்டம்.. கீ கொடுத்த ஸ்டாலின்.. சென்னைக்கு பிறந்த விடிவு!
சென்னை: மதுரவாயல் - துறைமுகம் பாலம் திட்டம் நேற்று முதல் தொடங்கி உள்ளது. இதற்கான டெண்டர்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டுவிட்ட நிலையில் குமார் கட்டுமான நிறுவனம் அங்கே ஏற்கனவே கட்டப்பட்ட பழைய தூண்களை இடித்துவிட்டு புதிய திட்டத்திற்கு ஏற்றபடி தூண்களை அமைக்க உள்ளது.
இதற்கான டெண்டர் விடப்பட்ட நிலையில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்துவிட்டன. சென்னையில் தற்போது பல்வேறு பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சாலைகள் சரி செய்யப்பட்டு வருகின்றன. புதிய சாலைகள் போடப்பட்டு வருகின்றன. சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை கூட பாலம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடக்க உள்ளன.

இந்த நிலையில்தான் இன்னொரு பக்கம் மதுரவாயல் பாலத்திற்கான கட்டுமானம் தொடங்கி உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைத்து துறைமுகத்திற்கு கூடுதல் ஏற்றுமதி, இறக்குமதியை மேற்கொள்ள வைத்து, வருமானத்தை பெருக்கும் வகையில் திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதி மூலம் 2009ல் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் என்பது திமுகவின் கனவு திட்டம் ஆகும். சரியாக சொல்ல வேண்டும் என்றால் கருணாநிதியின் கனவு திட்டமாக இது இருந்தது. ஆனால் 14 வருடங்களாக இந்த திட்டம் தொடங்கப்படாமல் முடக்கப்பட்டு இருந்தது,
ஜெயலலிதா அரசியல்: மதுரவாயல் - துறைமுகம் இடையே பாலம் அமைக்கும் திட்டம் பல காலமாக ஜெயலலிதா ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட திட்டம். மதுரவாயல் வழியாக சென்னை உள்ளே நுழையும் பலர் பாதி கட்டப்பட்டு நிற்கும் பாலங்களை பார்த்து இருப்பார்கள். வெறும் தூண்கள் மட்டும் போஸ்டர் ஓட்டும் இடங்களாக காட்சி அளிக்கும்.
கிடப்பில் போடப்பட்ட திட்டம்: அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா இந்த திட்டத்தை நிறுத்தினார். கூவத்தின் மீது பாலம் கட்டுவது சுற்றுசூழலை பாதிக்கும் என்று கூறி திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டார். தமிழ்நாட்டில் அப்போது அரசியல் ரீதியாக கடுமையாக ஈகோ மோதல் நிலவி வந்தது. முக்கியமாக புதிய சட்டசபை கூட மருத்துவமனையாக மாற்றப்பட்டது. அதனால் இந்த திட்டமும் கைவிடப்பட்டது , கட்டப்பட்ட பாலங்கள் அப்படியே நின்றன.
அந்த திட்டம் அதன்பின் மேம்படுத்தப்படாமலே இருந்தது. 2011ல் நிறுத்தப்பட்ட இந்த திட்டம் 2022 வரை தொடங்கப்படாமல் இருந்தது. 11 வருடமாக திட்டம் முடங்கி கிடந்தது. இங்கு வெறும் தூண்கள் மட்டும் போஸ்டர் ஒட்ட பயன்படுத்தப்பட்டு வந்தது. இது சென்னைக்கே அலங்கோலத்தை கொடுக்கும் விதமாக மாறியது.
இதனால் அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதையடுத்து திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த பாதையில் இரட்டை மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவித்தார். தமிழ்நாடு அரசு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஏற்கனவே கட்டப்பட்ட தூண்கள் இடிக்கப்பட்டு இங்கு புதிதாக மொத்தமாக கட்டுமானம் தொடங்க உள்ளது. முதலில் இருந்து கட்டுமானத்தை தொடங்குவதற்காக முடிவு எடுக்கப்பட்டது.
ஒப்பந்தம் கையெழுத்தானது: சென்னையில் கட்டப்பட உள்ள இந்த மதுரவாயல் பாலம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட உள்ளது. இதற்கான டெண்டர் சமீபத்தில் விடப்பட்ட நிலையில், J Kumar Infraprojects என்ற நிறுவனம் வென்றுள்ளது. ஏற்கனவே டெண்டர் 1, 2, 4 ஆகியவற்றை கைப்பற்றிய இந்த நிறுவனம் தற்போது டெண்டர் 4ஐயம் கைப்பற்றி உள்ளது.
இதனால் தற்போது அந்த நிறுவனம் பணிகளை தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தில் 9.7கிமீ இரண்டாம் கட்ட சாலைக்கான கட்டுமானத்திற்கான டெண்டர்களை இந்த நிறுவனம் வென்றுள்ளது. 910 நாள் கட்டுமான காலக்கெடு அவர்களுக்கு விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கான கட்டுமான மதிப்பீடு ரூ. 3608.94 என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது,.
ஒப்புதல்: இங்கே பணிகளை தொடங்க ரயில்வே, சுற்றுசூழல் துறை, கடல் ஒழுங்குமுறை துறை ஆகியவை ஒப்புதல் பெறப்பட்டுவிட்டது. . இதையடுத்து இதன் பணிகள் வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி அடுத்த மாதத்திற்குள் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளன,
பாலம் எப்படி இருக்கும்: இந்த பாலம் கோயம்பேடு முதல் நேப்பியர் பாலம் இடையே உள்ள தூரம் மட்டும் இரட்டை அடுக்கு பாலமாக அமைக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்த 20.6 கிலோ மீட்டர் தூர பாலத்தில் மொத்தம் 7 என்ட்ரி இருக்கும். அதாவது வேறு வேறு சாலைகளில் இருந்து பாலத்திற்குள் 7 இடங்களில் இணைய முடியும். முக்கிய இடங்களில் மட்டும் இந்த 7 இணைப்புகள் வைக்கப்படும். அதேபோல் பாலத்தில் இருந்து வெளியேற 6 இடங்களில் எக்சிட் வைக்கப்படும். அதாவது இரட்டை அடுக்கு பாலம் உள்ள பாதையில் பாலத்தில் இருந்து வெளியேற 6 எக்சிட் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
பாலம் நீளம்: இந்த திட்டத்தின் கீழ் 20.6 கிளி மீட்டர் தூரத்திற்கு பாலம் அமைக்கப்பட உள்ளது. இதில் கோயம்பேடு முதல் நேப்பியர் பாலம் இடையே உள்ள தூரம் மட்டும் இரட்டை அடுக்கு பாலமாக அமைக்கப்படும். இரட்டை அடுக்கு பாலம் என்றால், வடபழனியில் கீழே பாலம் மேலே மெட்ரோ பாலம் உள்ளதே.
அதேபோல்தான். ஆனால் இதில் இரண்டு மேம்பாலங்களும் வாகனங்கள் செல்ல பயன்படுத்தப்படும். சர்வதேச நாடுகள் பலவற்றில் இது போன்ற பாலங்கள் உள்ளன. போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக இது போன்ற இரட்டை பாலங்கள் பயன்படுத்தப்படும். ஒரு பாலம் நேப்பியர் டூ கோயம்பேடு செல்லவும், இன்னொரு பாலம் கோயம்பேடு டூ நேப்பியர் செல்லவும் ஒன் வே போல பயன்படுத்தப்படும். இதனால் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.
-
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்?












Click it and Unblock the Notifications