12 மாவட்டங்களில் 12 முதியோர் இல்லங்கள்! என்னென்ன வசதிகள்? மரிய வில்சன் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 12 மாவட்டங்களில் 12 முதியோர் இல்லங்கள் நிறுவப்படும். இதற்கு ரூ 6.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அது போல் மூத்த குடிமக்கள் பொழுதுபோக்கு மையங்கள் அமைக்கப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.

2026- 2027-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதை நிதியமைச்சர் மரியவில்சன் தாக்கல் செய்தார்.

marie wilson tamil nadu budget

அவர் தனது அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மூத்த குடிமக்கள் பொழுதுபோக்கு மையங்கள் 12 மாவட்டங்களில் அமைக்கப்படும். அதில் முதல்கட்டமாக 5 மாவட்டங்களில் நிறுவப்படுகிறது.

இங்கு நூலகம், தியானம், உள்ளரங்க விளையாட்டு வசதிகள் இருக்கும். மூத்த குடிமக்களுக்காக தமிழகம் முழுவதும் 1000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும். கிராம பஞ்சாயத்துகளுக்கே நேரில் சென்று இலவச உடல் பரிசோதனைகள், மருந்துகள் பெறலாம். 1 மருத்துவர் 1 செவிலியர், 1 இயன்முறை மருத்துவருடன் சேவை அளிக்கப்படும். இதற்கு ரூ 33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

விஜய் மாமா விஜய் மாமா என அன்போடு அழைக்கும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அங்கன்வாடி மையங்கள் மேம்பாடு செய்யப்படும்.

500 சிதிலமடைந்த அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும். பாதுகாப்பான குடிநீர், கழிப்பறை, மின்சார வசதிகள், குழந்தைகளின் பாதுகாப்பும் ஆரோக்கியமும் உறுதி செய்ய முயற்சி செய்யப்படும்.

திறன் பயிற்சி மற்றும் சுயதொழிலுக்கு மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படும். 5 மாவட்டங்களில் "அரண்" தங்குமிடங்கள் அமைக்கப்படும். ரூ 50 ஆயிரம் வரை சுயதொழில் வங்கிக் கடனுக்கு மானியம் அளிக்கப்படும். 15 மாவட்டங்களில் குறுகிய கால தங்குமிட வசதிகள் செய்து தரப்படும்.

தாய் கேர் என்ற திட்டத்திற்கு ரூ 23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் கருவுற்ர பெண்களுக்கான சேவை, உதவி மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்படும். மகப்பேறு நாள் நெருங்கும் வேளையில் தங்கியிருந்து பயன் பெறலாம்.

கட்டணமில்லாமல் உணவு, மருத்துவ உதவிகள், தொடர் மருத்துவக் கண்காணிப்பு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும். "மையம்- கிளை" தொலைமருத்துவ வலையமைப்பு ஏற்படுத்தப்படும். நிபுணத்துவ மருத்துவர்களை கொண்ட 5 மையங்கள், 200 கிளை மருத்துவமனைகள், அடுத்த 5 ஆண்டுகளில் 1000 மையங்களாக விரிவாக்கம் செய்யப்படும். இதற்காக ரூ 33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மையம் கிளை Hub and Spoke மருத்துவமனை வகையில் அமைப்புகள் உருவாக்கப்படும். 5 மண்டல புற்றுநோய் பராமரிப்பு மருத்துவமனைகள் அமைக்கப்படும். புற்றுநோய் பராமரிப்பு தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக ரூ 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+