Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பதில் சொல் திமுக".. விரட்டும் பாஜக.. "மன்னிப்பு கேள் அண்ணாமலை".. கொந்தளிக்கும் திமுக.. #ஹேஷ்டேக்

பிடிஆருக்கு எதிராக பாஜகவினர் ட்விட்டரில் ஹேஷ்டேக் ட்ரெண்டாக்கி வருகின்றனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொழுந்தியா பெண்ணின் வளைகாப்பு நிகழ்ச்சிதான் நிதியமைச்சருக்கு முக்கியமாகிவிட்டதா? ஜிஎஸ்டி கூட்டத்துக்கு பிடிஆர் ஏன் செல்லவில்லை? என்று கேட்டு பாஜகவினர் பதில் சொல் திமுக என்ற பெயரில் ஹேஷ்டேக் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.. அதேபோல, நிதியமைச்சர் சொல்லாத காரணத்தை பாஜக சொல்லி வருவதால், மன்னிப்பு கேள் அண்ணாமலை என்ற மற்றொரு ஹேஷ்டேக்கை திமுகவினர் வைரலாக்கி வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில், கடந்த 17-ம்தேதி, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநில நிதி துறை அமைச்சர்கள் இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றனர். ஆனால், தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கவில்லை.

 விளக்கம்

விளக்கம்

இதுகுறித்து செய்தியாளர்கள் பிடிஆரிடம் கேள்வி எழுப்பினர்.. அதற்கு அமைச்சர் பிடிஆர் சொல்லும்போது, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கான தேதி மிக தாமதமாக தெரிவிக்கப்பட்டது. 17ம் தேதி அன்று கூட்டம் நடைபெறும் நிலையில், 10-ம் தேதிக்கு மேல்தான் தகவல் சொன்னார்கள். அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டியது குறித்த விஷயங்களும் தாமதமாகவே தந்தார்கள்..

 வருகை

வருகை

அதற்குள் எனக்கு வேறு நிகழ்ச்சி வந்துவிட்டது.. இதோ இந்த பிரஸ்மீட்டை முடித்துவிட்டு இங்கிருந்து வளைகாப்புக்கு செல்கிறேன்.. ஏற்கனவே ஒப்புக் கொண்ட மற்ற நிகழ்ச்சிகளை ரத்து செய்யவும் முடியாது.. அனைத்து மாநில நிதியமைச்சர்களும் 100% நேரடியாக வருகை தந்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பதை 10 நாட்களுக்கு முன்பு வந்து சொல்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை" என்று கூறியிருந்தார்.

 பாஜக

பாஜக

பிடிஆர் தந்த இந்த விளக்கத்தை பாஜக தரப்பு ஏற்கவில்லை.. குறிப்பாக, மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் இதை பற்றி சொல்லும்போது, "பிடிஆர் சொன்ன அந்த காரணத்தை பார்த்து தமிழகமே அதிர்ச்சியில் தலைகுனிந்தது... வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டியிருப்பதால்தான் செல்லவில்லை என்று சொல்வாரா நம் தமிழ்நாட்டு நிதியமைச்சர்? இதிலிருந்து தங்கள் அரசு எதற்கு முக்கியத்துவம் தருகிறது என்று தெளிவாகிறது.

 விமர்சனம்

விமர்சனம்

செப்டம்பர் 2ம் தேதியே லக்னோவில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் அறிவிப்பு செய்தித் தாள்களில் வந்துவிட்ட நிலையில், போதிய அவகாசம் இல்லை என்கிறாரே.. பிறகு லக்னோவுக்கு நேரடி விமானம் இல்லை என்கிறாரே, பிறகு சிறிய ரக விமானங்களில் நான் செல்ல மாட்டேன் என்கிறாரே" என்று கடுமையாக சாடியிருந்தார்.

ஹேஷ்டேக்

ஹேஷ்டேக்

மேலும் பதில் சொல் திமுக என்ற பெயரில் ஹேஷ்டேக் ஒன்றையும் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.. அந்த ஹேஷ்டேக்கில் பிடிஆர் பேட்டியை பதிவிட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர் பாஜகவினர்.. இதைதான் தமிழக பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராமும் தன்னுடைய ட்வீட்டில் பதிவிட்டு திமுகவை விமர்சித்துள்ளார். அண்ணாமலையின் இந்த பேச்சை ஏற்கனவே பிடிஆர் மறுத்திருந்தார்.. "எனக்கு கொழுந்தியாவே கிடையாது... பொய் சொல்வதற்கும் குறைந்தபட்ச அறிவு வேண்டும்" என்று அண்ணாமலைக்கு பதில் கொடுத்தார்...

வளைகாப்பு

வளைகாப்பு

எனினும் பாஜகவினர் வேண்டுமென்றே கொழுந்தியா மகளுக்கு வளைகாப்பு என்று நிதியமைச்சர் சொன்னதாக வாட்ஸ் அப்பில் விட்டுள்ளதாக கூறப்படுகிறது.. மேலும், பிடிஆரின் பிரஸ்மீட்டை கூட பார்க்காமல் தனது கட்சியினரின் வாட்ஸ் அப் பரப்புரையை நம்பி செய்தியாளர் கூட்டத்திலும், முதல்வருக்கு எழுதிய கடிதத்திலும், "கொழுந்தியா பொண்ணுக்கு வளைகாப்பு அதனால் ஜிஎஸ்டி கூட்டத்துக்கு செல்லவில்லை" என்று ஒரு நிதியமைச்சர் சொல்லக் கூடிய பதிலா? என்று கேட்டிருந்தார் அண்ணாமலை.

 திமுக - அண்ணாமலை

திமுக - அண்ணாமலை

இதற்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. நிதியமைச்சர் சொல்லாத காரணத்தை சொல்லி அவரை இழிவுபடுத்தியதற்காக அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றனர்.. "#மன்னிப்புகேள்_அண்ணாமலை" என்பதையும் ட்விட்டரில் டிரண்டிங் ஆக்கியுள்ளனர்.. ஒருபக்கம் பதில் சொல் திமுக மற்றொரு பக்கம் மன்னிப்பு கேள் அண்ணாமலை என இரண்டு ஹேஷ்டேக்குகளும் வைரலாகி கொண்டிருக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+