மத்திய அரசு நிதி தருவதில்லை.. பொதுமக்களுக்கு பொங்கலுக்கு 1000 ரூபாய் தர முடியவில்லை- தங்கம் தென்னரசு
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படாதது ஏன் என்ற கேள்விக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார். வெள்ள நிவாரணத்திற்காக மத்திய அரசிடம் கோரப்பட்ட நிதி கிடைக்காததால், பொங்கல் பரிசுத் தொகை அளிக்க முடியவில்லை என்று கூறி இருக்கிறார்.
தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழக மக்கள் தயாராகி வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு பரிசுத் தொகுப்பை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அந்த பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, சர்ச்சரை, முழு கருப்பு உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளது. ஒரு கிலோ பச்சரிசி ரூ.35.20, சர்க்கரை ரூ.42.84, கரும்புக்கு ரூ.35 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இதற்காக தமிழக அரசு சார்பாக ரூ.280 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்பின் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. அதேபோல் பொங்கல் பரிசுத் தொகுப்பை ஒரே நாளில் அனைவருக்கும் வழங்க முடியாது என்பதால், ரேஷன் கடை ஊழியர்கள் கடந்த சில ஆண்டுகளாக பின்பற்றி வரும் முறையில் டோக்கன் அளித்து வருகின்றனர்.
டோக்கன் வழங்கும் பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சின்னமலை அருகே உள்ள டியுசிஎஸ் ரேஷன் கடையில் மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி பணியை தொடங்கி வந்தார். இதன்பின் தமிழ்நாடு முழுவதும் இன்று ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இருந்தாலும் இந்த ஆண்டில் பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படாதது பேசுபொருளாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பொங்கல் பண்டிகயையொட்டி ரூ.1,000 பரிசுத் தொகை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்தன. இந்த நிலையில் சட்டப்பேரவையில் பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.1,000 அளிக்கப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். அதில், வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ.37 ஆயிரம் கோடி கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு மத்திய அரசு ரூ.276 கோடி மட்டுமே வழங்கப்பட்டது. SSA திட்டத்தில் ரூ.2,100 கோடியை கூட மத்திய அரசு இன்னும் விடுவிக்கப்படவில்லை. இதனால் அந்த செலவுகள் அனைத்து மாநில நிதியில் இருந்தே ஈடுபட்டப்படுகின்றன.
இந்த காரணங்களால் தான் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். அதேபோல் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி மகளிரின் வங்கிக் கணக்கில் அளிக்கப்பட்டு வந்த உரிமைத் தொகை, இம்முறை பொங்கல் பண்டிகையையொட்டி 9ஆம் தேதியே வங்கி வணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications