ரொம்ப கஷ்டம்.. படத்தில் மறைந்திருக்கும் நபர் எங்கே? உங்கள் கண்களுக்கு தெரிகிறாரா?
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் குதிரைக்கு மத்தியில் ஒரு நபரின் உருவம் மறைந்து இருக்கிறது. 100 பேரில் 99 சதவீதம் பேரால் இதனை கண்டுபிடிக்க முடியவில்லை. உங்களால் முடிகிறதா என்று சோதித்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் அதிகம் டிரெண்ட் ஆகி வருகின்றன. பார்ப்பதற்கு எளிதாக தோன்றினாலும் இதில் மறைந்து இருக்கும் விடையை கண்டுபிடிக்க சற்று மூளையை கசக்க வேண்டியிருக்கும். பார்க்கும் கோணங்களை மாற்றினால் ஒரு சில நேரங்களில் இதற்கான விடை எளிதில் கிடைத்துவிடும்.

மேலும், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், பயனுள்ள வகையில் பொழுதை கழிக்கும் விதமாக இருப்பதால் இணையத்தில் ஓய்வு நேரத்தில் உலவும் நெட்டிசன்கள் ஆர்வத்துடன் இந்த படங்களுக்கு விடையளிக்கு முயற்சி செய்வார்கள். மேலும் தங்கள் நட்பு வட்டாரத்திற்கும் பகிர்கிறார்கள். இன்னும் சிலரோ தங்கள் நட்பு வட்டத்தில் உள்ளவர்களுக்கு பகிர்ந்து, விடையை நான் கண்டுபிடித்து விட்டேன்... உங்களால கண்டுபிடிக்க முடியுமா? என சவால் விட்டு அவர்களின் அறிவுத்திறனையும் ஜாலியாக டெஸ்ட் செய்து பார்க்கிறார்கள்.
இப்படியாக இணையத்தில் இந்த படங்கள் தற்போது வைரல் ஹிட் அடித்து வருகின்றன. அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த படமானது பிளாக் அண்ட் ஒயிட்டாக உள்ளது. இதில் குதிரை ஒன்று நிற்கிறது. அருகில் வேறு நபர்கள் யாரும் இருக்கின்றது போல் இல்லை. ஆனால், இந்த படத்தில் உண்மையில் ஒரு மனிதன் ஒழிந்து இருக்கின்றான்.

அந்த மனிதன் எங்கே இருக்கிறான் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே இன்றைய சவால். அதுவும் 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். என்ன போட்டிக்கு ரெடியா?.. 1.. 2.. 3.. 10. டைம் ஓவர். மனிதன் முகம் எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடித்துவிட்டீர்களா?.. 10 செகண்டில் கண்டுபிடித்து இருந்தீர்கள் என்றால் உண்மையி நீங்கள் கிரேட் தான். உங்கள் கவனிப்பு திறன் அபாரமாக உள்ளது.
ஆனால் 10 செகண்டில் கண்டுபிடிக்க முடியவில்லை என்று நினைப்பவர்கள் வருத்தப்பட வேண்டாம். ஏனென்றால் 100 பேரில் 99 சதவீதம் பேரால் இதில் மனிதன் எங்கே இருக்கின்றான் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே நீங்கள் கூடுதல் டைம் எடுத்து மீண்டும் ஒரு முறை முயற்சித்து பாருங்கள். அப்படியும் தெரியவில்லை என்றால், ஒரு டிப்ஸ் கொடுக்கிறோம்.

அதாவது படத்தை இடதுபக்கமாக திருப்பி பாருங்கள். அதுவும் குதிரையின் உடம்பில் மட்டும் உற்று கவனியுங்கள். அதில் தான் விடை இருக்கிறது. இப்போது பெரும்பாலானோர் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். அப்படியும் தெரியவில்லையே என்று நினைப்பவர்களுக்கு இங்கே விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications