விமானங்களில் ஹாரன் இருக்கிறதா? அடேங்கப்பா இந்த விஷயம் இவ்வளவு நாள் தெரியாம போச்சே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகின் மிகப்பெரிய வாகனங்களில் விமானமும் ஒன்று. எல்லா வாகனங்களிலும் இருப்பதை போல இதில் ஹாரன் இருக்கிறதா? என்று பலருக்கும் சந்தேகம் எழலாம். இதற்கு இந்த செய்தி விளக்கமளிக்கிறது.

ஆமாம் மக்களே விமானங்களில் ஹாரன் இருக்கிறது. ஆனால் அதற்கான காரணங்கள் வித்தியாசமானது என தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.

airplanes

அச்சுறுத்தும் விமான பயணங்கள்:

நியூ இயர் வந்துவிட்டாலே விமான விபத்துகள் அதிகரித்து விடுகின்றன. இந்த ஆண்டு புத்தாண்டு நெருங்கும்போது தென்கொரியாவில் ஏற்பட்ட விமான விபத்து அனைவருக்கும் கிலியை கிளப்பியிருந்தது. 175 பயணிகள் மற்றும் 6 விமான நிறுவன ஊழியர்களுடன் இந்த விமானம் தென்கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த டிச.24ம் தேதி தரையிறங்கியது. எது நடக்கக்கூடாது என்று எல்லோரும் பயந்தார்களோ, கடைசியில் அதுதான் நடந்தது.

அதாவது விமானம் ஓடுபாதையிலிருந்து சறுக்கிக்கொண்டே சென்று கடைசியாக, ஒரு சுவரின் மீது மோதி வெடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே 179 பேர் உயிரிழந்தனர். 2 பேர் மட்டும் உயிர் தப்பினர்.

அதேபோல கடந்த டிச.25ம் தேதி, அஜர்பைஜானின் பாகு நகரில் இருந்து ரஷ்யாவின் கிரான்ஸி எனும் நகரை நோக்கி 67 பேருடன் வந்து வந்துக்கொண்டிருந்த கஜகஸ்தான் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானமும் விபத்தில் சிக்கியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். ஆனால் பைலட் சிறப்பாக செயல்பட்டதால் மீதமுள்ள அனைத்து பயணிகளும் உயிர் தப்பினர்.

காரணம் என்ன?:

இந்த இரண்டு விபத்துகளுக்கு இரண்டு தனித்தனி காரணங்கள் இருக்கின்றன. தென்கொரிய விமான விபத்துக்கான காரணம் பறவை மோதல் என்று சொல்லப்படுகிறது. இதை உறுதி செய்யும் வகையில் சில வீடியோ காட்சிகளும் வெளியாகியிருந்தன. அதில் விமானத்தின் வலதுபுற என்ஜினில் பறவை ஒன்று மோதியது தெளிவாக தெரிந்தது. இதனால் விமானத்தின் லேண்டிங் கியர் வேலை செய்யவில்லை.

ஆனால் இதற்கெல்லாம் விமானிகளுக்கு ஏற்கெனவே பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கும். தான் பெற்ற பயிற்சியின் அடிப்படையில் விமானி 'பெல்லி லேண்டிங்' செய்திருந்தார். விமானத்தின் வயிற்று பகுதியை ரன்வேயில் தேய்த்தபடி லேண்ட் செய்வதை பெல்லி லேண்டிங் என்று சொல்வார்கள். ஆனால் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. சரி பறவை மோதலை சமாளிக்க விமானங்களில் ஹாரன் வைத்திருக்கலாமே? என்று உங்களுக்கு தோன்றலாம்.

விமானங்களில் ஹாரன்:

ஆம் நீங்கள் எதிர்பார்ப்பதை போல விமானங்களில் ஹாரன் இருக்கிறது. ஆனால் அதனுடைய பயன்பாடு கொஞ்சம் வித்தியாசமானது. அதாவது விமானம் புறப்படுவதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின்போது இந்த ஹாரன் பயன்படுத்தப்படுகிறது. அதாவது விமானம் வானத்தில் பறக்கும்போது அதன் வெளிப்புறத்தில் எரியும் விளக்குகள் முக்கியமானவை. இவையெல்லாம் புறப்படுவதற்கு முன்னர் செக் செய்யப்படும். அப்படி செக் செய்யும் ஊழியர்களுடன் தொடர்புகொள்ள இந்த ஹாரன் பயன்படுத்தப்படுகிறது.

மட்டுமல்லாது விமானத்தின் ஹைட்ராலிக் அழுத்தம் சரியாக இருக்கிறதா? என்பதை பரிசோதிக்கவும் இந்த ஹாரன் பயன்படுத்தப்படுகிறது. விமானத்திற்கு கீழே இருக்கும் ஊழியர்களை விமானி அழைக்க வேண்டும் எனில் இதை பயன்படுத்துவார்.

சத்தம் எப்படி இருக்கும்?:

ஒவ்வொரு விமானத்திலும் ஹாரன் சத்தம் வித்தியாசமாக இருக்கும். நம்மூரில் உள்ள ரூட்டு பஸ்ஸின் ஹாரன் போல, 'ரம்பப ரம்பப ரம்பப' என்று அலராது. மாறாக, நோக்கியா 1100 மொபைலில் வரும் ரிங்டோன் போல இருக்கும். கேட்பதற்கு சிரிப்பாக இருக்கும். ஏர்பஸ், போயிங் என ஒவ்வொரு விமானத்திற்கும் இந்த ஹாரன் சத்தம் வித்தியாசமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+