படத்தில் "டைனோசர்" எங்கே இருக்கு? 99 சதவீதம் பேர் பெயில்.. 8 செகண்ட் டைம்.. முடிந்தால் கண்டுபிடிங்க
சென்னை: இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் டைனோசர் ஒன்று மறைந்துள்ளது. அந்த டைனோசர் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். அதுவும் 8 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். 99 சதவீதம் பேர் டைனோசர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கவில்லை. உங்களால் முடிகிறதா என முயற்சித்து பாருங்கள்.
மூளையை கசக்கி பிழிய செய்யும் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன. தினம் தினம் புதிது புதிதாக இணையத்தில் பரவி வரும் இத்தகைய ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்கள், பொழுதுபொக்கு மட்டுமின்றி சவால் நிறைந்ததாகவும் இருக்கிறது. இதனால் இந்த இல்யூஷன் படங்களில் மறைந்து இருக்கும் விடையை கண்டுபிடித்து தங்கள் திறனை சோதித்துக் கொள்கிறார்கள் நெட்டிசன்கள்.

இந்த இல்யூஷன் படங்களை மேலோட்டமாக பார்த்தால் ஒரு விதமாகவும் ஆழ்ந்து பார்த்தால் அதன் உண்மையான தோற்றமும் கிடைக்கும். ஒருமுறை பார்க்கும் போதே விடையை கண்டுபிடிக்க முடியாது. ஒருவேளை கண்டுபிடித்துவிட்டால், தங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களுக்கும் அதனை அனுப்பி வைத்து அவர்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்றும் சோதித்து பார்க்கிறார்கள்.
அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் படத்திற்கான விடையை 99 சதவீதம் பேரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த படத்தில் டைனோசர் எங்கே இருக்கிறது என்று தான் கண்டுபிடிக்க வேண்டும். குறிப்பிட்ட 8 செகண்டிற்குள் டைனோசர் எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். என்ன போட்டிக்கு தயாரா?.. உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1..2 .. 3.. .. 8.. ஒகே டைம் ஓவர்.
குறிப்பிட்ட 8 செகண்ட் டைமிற்குள் கண்டுபிடித்து இருந்தால் உங்களுக்கு பாராட்டுக்கள். உங்கள் கவனிப்பு திறன் அபாரமாக உள்ளது. ஆனால் படத்திற்கான விடையை குறிப்பிட்ட நேரத்திற்குள் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்கிறவர்கள் இன்னும் கொஞ்சம் டைம் எடுத்து தேடிப்பாருங்கள் கண்டுபிடித்துவிடலாம். படத்தில் வீட்டின் அருகே ஒரு மரங்கள் நிற்கின்றன.
இதில் சிலர் குப்பைகளை கூட்டிக்கொண்டு உள்ளனர். அணில் மரத்தில் ஒரு காடு இருப்பது போலவும், அதில் அணில், நாய் உள்ளிட்டவை உலாவுவது போலவும் உள்ளது. இதில் தான் டைனோசர் ஒன்றும் மறைந்து இருக்கிறது. எப்போதும் போல படத்தின் வலதுபுறத்தில் மட்டுமே பார்த்தால் போதும். ஆனால் மேலோட்டமாக பார்க்காமல் சற்று ஆழ்ந்து பார்த்தால் விடையை கண்டுபிடித்துவிடலாம்.

ஆம் படத்திற்கான விடை வலதுபுறத்தில் தான் இருக்கிறது. ஆனால் டைனோசர் மிகப்பெரியது என்பதால் படத்திலும் மிகப்பெரியதாக இருக்கும் என்ற எண்ணத்தில் தேட வேண்டாம். சிறியதாக தான் டைனோசர் இருக்கிறது. இப்போது கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனால் அப்படியும் தெரியவில்லையே என்கிறவர்கள், பின்னால் இருக்கும் மரத்திற்கு அடியில் பார்த்தால் விடை தெரிந்துவிடும். இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்திலும் டைனோசர் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.












Click it and Unblock the Notifications