பூக்களில் "திருட்டுத்தனமாக" தேன் குடிக்கும் தேனீயை கண்டுபிடிங்க! மேக்ஸிமம் 7 செகன்ட்ஸ்தான் டைம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பூக்களில் தேன் எடுக்கும் தேனீ எங்கே இருக்கிறது என்பதை வெறும் 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? அப்படி கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் கில்லிதான்!

அப்படி கண்டுபிடித்துவிட்டால் நீங்கள்தான் பாஸ், கில்லாடி! என்ன இந்த சவாலை எதிர்கொள்ள நீங்கள் தயாரா? ஓய்வு நேரத்தை அரட்டை அடித்து வெட்டி கதை பேசி வீணாக்குவதைவிட்டுவிட்டு தினமும் இது போல் ஏதாவது மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகளை விளையாடினால் மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.

Find the honey bee which is drinking honey from the flowers

அந்த நாளும் புத்துணர்ச்சியாக இருக்கும். புதிரை கண்டுபிடிக்கும் முன்பு ஆப்டிக்கல் இல்யூஷன் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். ஆப்டிக்கல் இல்யூஷன் என்பது கண்கட்டி வித்தை. சுருக்கமாக சொல்ல போனால் திருப்பதியில் மொட்டை அடித்த உயரமான சிகப்பு நிற சர்ட் அணிந்தவரை கண்டுபிடிப்பது போன்றது. இது நடக்கிற காரியமா?

திருப்பதி என்றாலே மொட்டைதான். அதில் பெரும்பாலும் உயரமாகவும் எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் சிவப்பு நிற சட்டையை அணியத்தான் செய்வார்கள். அப்படி இருக்கும் போது எப்படி கண்டுபிடிப்பது. அது போல் மேகக் கூட்டங்களுக்கு இடையே நட்சத்திரங்களை கண்டுபிடிக்கச் சொன்னால் எப்படி?

அது போல்தான் குழப்பங்கள் நிறைந்தது. கண்களை ஏமாற்றும், அறிவை தூண்டும், மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுத்தான் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் ஆகும். ஒரு முறை விளையாடி பார்த்தால் போதும். அதன் பிறகு இதை விடவே மாட்டீர்கள். அந்த அளவுக்கு ஆர்வத்தை தூண்டிவிடும். தற்போது சமூகவலைதளங்களில் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன்கள் தான் உலா வருகின்றன.

நிறைய நண்பர்கள், உறவினர்களின் வாட்ஸ் ஆப் குரூப்புகளில் ஆப்டிக்கல் இல்யூஷன் , பசில்கள் இல்லாமல் நாளே முடியாது. கடைசியில் விடை சொல்லும் போதுதான் அய்யோ இது கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டதே என எண்ணுவோம். அப்படிப்பட்ட நிலையில் தற்போது நாங்கள் ஒரு படத்தை காட்டுகிறோம்.

அதாவது ஒரு படத்தில் கலர் கலராக பூக்கள் உள்ளன. அவை பார்ப்பதற்கு சாமந்தி மாதிரியும், சூரிய காந்தி பூ மாதிரியும் காணப்படுகின்றன. ஆனால் பார்ப்பதற்கே கண்ணை பறிக்கின்றன. ஏதோ பூ கண்காட்சிக்குள் வந்துவிட்டது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது. அதாவது வெள்ளை, பிங்க், மஞ்சள், ஆரஞ்ச் ஆகிய நிறங்களில் நிறைய பூக்கள் காணப்படுகின்றன.

பூக்கள் என்றாலே தேன் இருக்கும். அதை குடிக்க தேனீக்கள் சுற்றத்தானே செய்யும். அந்த வகையில் இந்த பூக்களுக்கு மத்தியில் ஒரு தேனீ சைலண்ட்டாக அமர்ந்து தேனை குடித்துக் கொண்டிருக்கிறது. அது எங்கே இருக்கிறது என்பதை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். நன்றாக ஜூம் செய்து பாருங்கள். பூக்களின் நிறத்தில் கூட அந்த தேனீ இருக்கலாம். எனவே ஒவ்வொரு பூவாக செக் செய்யுங்கள். நிச்சயம் தேனீ கிடைக்கும்.

1,2, 3,4,5,6,7....... என்ன தேனீயை கண்டுபிடித்துவிட்டீர்களா? தெரியாவிட்டால் நாங்கள் வட்டமிட்டு காட்டியுள்ளோம். அதை பாருங்கள். நிச்சயம் நீங்கள் அந்த இடத்தை கடந்துதான் மற்ற பூக்களுக்கு போயிருப்பீர்கள். இப்படிதான் இது நம் கண்களை ஏமாற்றும். இது முதல்முறையாக இருந்தால் நீங்கள் கண்டுபிடிக்காவிட்டாலும் முயற்சி செய்தமைக்கு பாராட்டுகள். அடுத்த முறை மேலும் முயற்சித்து சரியான விடையை சொல்லுங்கள். நிறைய பயிற்சி இருந்தும் கண்டுபிடிக்க முடியாதவர்கள் உங்கள் கவனத்தை அதிகப்படுத்துங்கள்.

Find the honey bee which is drinking honey from the flowers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+