பதினொன்று + பதினொன்று = நான்கு.. அப்போ "14 + 14" எத்தனை?.. ஈசி ட்ரிக்ஸ் தான்.. கண்டுபிடிச்சா கில்லி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் 11 + 11 = 4 என்றும், 12 + 12 = 6 என்றும், 13 + 13 = 8 என்றும் உள்ளது. எனில், 14 + 14 = ? என்று கேட்கப்பட்டுள்ளது. சின்ன ட்ரிக்ஸ் தான். இந்த புதிருக்கான விடையை 5 செகண்டில் கண்டுபித்தால் நீங்க ஜீனியஸ் தான்.

நெட்டிசன்கள் மத்தியில் ஆப்டிகல் இல்யூஷன், PUZZLE எனப்படும் புதிர்கள் ஆகியவை அதிகம் டிரெண்டாகி வருகின்றன. ஓய்வு நேரத்தில் இணையத்தில் உலவும் நெட்டிசன்களுக்கு பயனுள்ள வகையில் பொழுதை போக்கும் விதமாக இந்த படங்கள் இருக்கின்றன. இதனால், நெட்டிசன்கள் அதிகம் விரும்பும் ஒன்றாக இந்த புதிர்கள் மற்றும் இல்யூஷன் படங்கள் அமைந்து இருக்கின்றன.

Find the missing number in the optical illusion puzzle picture given here

புதிர்களை பொறுத்தவரை பொரும்பாலான போட்டித்தேர்வுகளில் கண்டிப்பாக இடம் பெற்று இருக்கும். போட்டி தேர்வுகளுக்கு படிக்கும் இளைஞர்கள் கண்டிப்பாக இது போன்ற புதிர் கணக்குகளை பிராக்டிஸ் செய்யாமல் இருக்க முடியாது. மிகவும் எளிதானதாகவும் அதேவேளையில் கொஞ்சம் டிரிக்ஸ் ஆகவும் இந்த புதிர்கள் இருக்கும்.

நேரடியாக விடை இன்றி நம் மூளையை கொஞ்சம் சோதிப்பதாக இந்த புதிர்கள் இருக்கும். இதனால், ஒருவரின் அறிவுத்திறன், புத்திக்கூர்மை, கவனிப்புத்திறன் உள்ளிட்டவற்றை சோதிக்க கூடியது. தேர்வுக்கு தயராகி வருவபர்களின் வாட்ஸ் அப் குரூப்பில் கண்டிப்பாக இத்தகைய புதிர் கணக்குகள் இடம் பெற்று இருக்கும். கொஞ்சம் சவாலான புதிர்களே போட்டித்தேர்வுகளில் இருக்கும்.

ஆனால் அந்த அளவுக்கு இல்லாமல் இங்கே ரொம்பவே ஈசியான ஒரு புதிர் கணக்கு ஒன்றைத்தான் இங்கே பார்க்க இருக்கிறோம். 8-ஆம் வகுப்பு மாணவர் கூட கண்டுபிடிக்கும் அளவுக்கான சிம்பிள் புதிர் கணக்குதான் இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் இடம் பெற்றுள்ளது.

11 + 11 = 4
12 + 12 = 6
13 + 13 = 8
14 + 14 = ?

இதற்கான விடையை 5 செகண்டில் கண்டுபிடிங்க பார்க்கலாம்.. உங்களுக்கான டைம் ஸ்டார்ட்.. 1,2,3....5 ஒகே டைம் ஓவர்.. உங்களுக்கான டைம் முடிந்தது. 5 செகண்டில் கண்டுபிடித்து இருந்தால் நீங்கள் கணக்கில் புலிதான்.... சரி.. அதெப்படி திமிங்கலம்.. என சந்தானம் கேட்பது போல 11+11=4 ஆகும் என்று யோசிக்கிறீங்களா.. இந்த டிரிக்ஸ் கண்டுபிடித்தால் விடை உங்கள் கைகளில் அடுத்த நொடியே இருக்கும்.

சரி இப்பவும் விடையை கண்டுபிடிக்க முடியவில்லை என நினைப்பவரா நீங்கள்... விடை எப்படி வந்தது இன்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் கேள்விக்கான விடை 14 + 14 = 10- என்பதே சரியானது. எப்படி 10 வந்தது என்பது பாற்றி இங்கே பார்ப்போம்.. 11+11 =4 என எப்படி வரும் என்று யோசித்து பார்த்தால் போதும்.. இதற்கு பெரிய பார்முலா எல்லாம் தேவையில்லை.. சின்ன மனக்கணக்கே போதும்..

11+11=என்பதை 2+2 என மாற்றிக்கொள்ளலாம்; இந்த இரண்டையும் கூட்டினால் 4 வருகிறதே.. அதேபோல 12+12 என்ற எண்ணில் முதல் இரண்டு டிஜிட்களை கூட்டுங்கள். அதாவது ஒன்றையும் இரண்டையும் கூட்டினால் மூன்று வருகிறதா அதேபோல அடுத்த எண்ணையும் கூட்டுங்கள்.. 3 வந்துவிடும்.. இந்த 3+3 என்ற எண்ணைக் கூட்டுங்கள் விடை 6 ஆக வந்துவிடும். அதே போலத்தான் 14+14 என்பது 5+5 ஆக மாற்றி இரண்டையும் கூட்டுங்கள்.. விடை 10..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+