நக்கீரன் கோபால் மீது பாய்ந்த வழக்கு! சென்னை சைபர் கிரைம் போலீஸ் அதிரடி.. விடாத முதல்வர் விஜய் அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் பற்றியும், முதல்வர் விஜய் பற்றியும் யூடியூப் சேனலில் அவதூறான கருத்துகளை பதிவு செய்த புகாரில் பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தவெக தலைவரும், தற்போதைய முதல்வருமான விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அந்த சமயத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

nakkheeran gopal police

இதுதொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த 41 பேரின் மரணத்துக்கு விஜய் மற்றும் தவெக நிர்வாகிகள் தான் காரணம் என்று திமுக கடுமையாக குற்றம்சாட்டி வருகிறது.

''கரூரில் 41 கொலை நடந்த பிறகு அதுபற்றி நான் அங்குலம் அங்குலமாக பேசியிருந்தேன். அங்கு நடந்த சம்பவங்கள் என் கண்முன்னே உள்ளது. போதையில்இருந்து ஒருவர் கீழே விழுந்ததில் குழந்தை இறந்துள்ளது. விஜய் பிரசார வாகனத்தில் இருந்து கீழே குதித்து காப்பாற்றி இருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. மேலும் சினிமா சூட்டிங் நடத்தி உள்ளார்கள் என்று நான் செய்தியை வெளியே கொண்டு வந்னே். இதனால் அவர்கள் படத்தில் அந்த காட்சியை வைக்கவில்லை. இல்லாவிட்டால் அதுதொடர்பான காட்சி படத்தில் இடம்பெற்றிருக்கும்'' என்று கூறினார்.

இதுதொடர்பாக நந்தகுமார் என்பவர் சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். ''நக்கீரன் கோபால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். முதல்வர் விஜய் மீது அவதூறு பரப்புகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று புகாரில் கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் நக்கீரன் கோபால் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கரூர் கூட்ட நெரிசலின்போது அங்கு 'ஜனநாயகன்' படத்திற்கான சூட்டிங் நடந்ததாக நக்கீரன் கோபால் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறார். ஆனால் இந்த குற்றச்சாட்டை தவெகவினர் மறுத்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி முதல்வர் விஜய்யும் கரூர் கூட்ட நெரிசலில் தன்மீது திமுகவினர் பழிபோடுகின்றனர் என்று மேடைக்கு மேடை பேசி வரும் நிலையில் நக்கீரன் கோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+