சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொள்ளாச்சி பலாத்காரம்.. எப்.ஐ.ஆர் மாயம்

Google Oneindia Tamil News

சென்னை: பொள்ளாச்சியில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு செய்தல், ஆபாசபடம் எடுத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட, 4 பேருக்கு எதிராக காவல்துறை பதிவு செய்த எப்ஐஆர் காப்பி, ஆன்லைனில் பிளாக் செய்யப்பட்டுள்ளது.

FIR on Pollachi sexual abuse case has been hidden by competent authority

முதல் தகவல் அறிக்கை எண் 58 மற்றும் முதல் தகவல் அறிக்கை எண் 60 ஆகியவற்றை, ஆன்லைனில் பார்க்கமுடிந்தபோதிலும், பாலியல் தொந்தரவு செய்தல், வழிப்பறியில் ஈடுபடுதல், விருப்பம் இல்லாமல் பெண்களை ஆபாச படம் எடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ், திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார் ஆகிய நால்வர் மீது பதிவான எப்ஐஆர் எண் 59ஐ மட்டும் ஆன்லைனில் பார்க்க முடியவில்லை. 'உரிய அத்தாரிட்டியால்' அந்த தகவல், பிளாக் செய்யப்பட்டுள்ளதாக ஆன்லைன் திரையில் வாசகம் மின்னுகிறது.

லெஸ்பியனா இருக்கலாமா.. சென்னை பெண் டாக்டரை பேசியே மடக்கிய திருநாவுக்கரசு.. பகீர் தகவல்கள்! லெஸ்பியனா இருக்கலாமா.. சென்னை பெண் டாக்டரை பேசியே மடக்கிய திருநாவுக்கரசு.. பகீர் தகவல்கள்!

உச்ச நீதிமன்றம் இதுபற்றி தெளிவாக வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. அதன்படி, காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் எப்ஐஆர், அடுத்த 24 மணி நேரத்தில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இன்டர்நெட் பிரச்சினை போன்ற விஷயங்கள் இருந்தால், 48 மணி நேரத்திலிருந்து, 72 மணி நேரத்துக்குள்ளாவது பதிவு செய்யப்பட வேண்டும் என காலவரம்பு வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆனால், பொள்ளாச்சி பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்ட பிறகும், ஆன்லைனின் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
First information report on Pollachi sexual abuse case has been hidden by competent authority, says website.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X