சென்னை சிப்காட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. கொழுந்துவிட்டு எரியும் தீயால் புகைமண்டலம்!
சென்னை: சென்னை அருகே சிப்காட் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் சோப்பு தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தொழிற்சாலையில் இருந்த ரசாயணங்களில் தீப்பற்றியதால் தொழிற்சாலை முழுவதும் மளமளவென தீப்பற்றியது. கொழுந்து விட்டு எரிந்த தீயால் பல அடி உயரத்துக்கு புகை வெளியானது.
இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. தகவலறிந்து சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்த தீவிபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புகை மண்டலத்தால் தொழிற்சாலையை சுற்றியுள்ள மக்கள் கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications