சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோவிலில் தீ விபத்து! பக்தர்கள் அதிர்ச்சி! தீயை போராடி அணைத்த வீரர்கள்!
சென்னை: சென்னை மயிலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள சாய் பாபா கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோவிலை பொறுத்தவரை பிரசித்தி பெற்ற கோவிலாகும். வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று இரவு அரசியல், சினிமா முக்கிய பிரபலங்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முதல் சாமானியர்கள் வரை சாய் பாபா கோவிலுக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ள்ளனர்.

இந்நிலையில் மயிலாப்பூர் சாய்பாபா கோவிலில் கட்டுமானப் பணிகள் நடப்பதாகவும் அதன் காரணமாக ஓலைகளால் சுற்றி மறைப்பு கட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஓலையில் தீபாவளிக்கு வைத்த ராக்கெட் பட்டாசு பறந்து வந்து விழுந்ததில் தீப்பொறி பற்றி தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்படுகிறது.
மாலை 6.15க்கு இந்த தீ விபத்து நிகழ்ந்ததாகவும் சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டதால் தீ மேலும் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. இதனிடையே இந்த தீ விபத்தில் யாரேனும் காயம் அடைந்தார்களா, பாதிப்புகள் என்ன என்பது பற்றிய விவரங்களை தீயணைப்புத்துறையும், காவல்துறையும் இன்னும் வெளியிடவில்லை.
தீபாவளி அன்று சாய்பாபா கோவில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது சாய்பாபா பக்தர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications