கண்ணாடியில பாருங்க.. கார்ல யார் தெரியுதா? எடப்பாடியின் காஸ்ட்லி வண்டிக்கு இதான் காரணமா? வாவ் ஸ்பெஷல்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாங்கியுள்ள புதிய வாகனம்தான், பலரது கவனத்தையும் இன்னமும் ஈர்த்து வருகிறது. அதைவிட முக்கியமாக, எதற்காக இந்த வாகனத்தை எடப்பாடி வாங்கியிருக்கிறார் என்ற காரணமும் பரபரப்பை கிளப்பி விட்டு வருகிறது.
இத்தனை நாட்களும் இல்லாத வகையில், புது வாகனத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார் எடப்பாடி.. force நிறுவனத்தின் urbania வகை வாகனத்தை எடப்பாடி பழனிசாமி வாங்கி உள்ளார்.. இந்த காஸ்ட்லி காரில்தான் குளுகுளுவென வலம் வருகிறார் எடப்பாடி.. திடீரென இந்த காரில் ஏன் அவர் வருகிறார் என்ற சந்தேகம் வட்டமடித்தே வருகிறது..

சுற்றுப்பயணம்: வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் பிரச்சாரத்திற்காக பிரத்தியேகமான புதிய இந்த வாகனம் வாங்கப்பட்டதாக சொல்கிறார்கள்.. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால், இந்த கார் வசதியாக இருக்கும் என்கிறார்கள்.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதாலும், கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டதாலும், பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியமும் எடப்பாடிக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது..
காலில் ஆபரேஷன்: அதுமட்டுமல்ல, இந்த கார் வாங்கியதற்கு வேறு காரணங்களும் சொல்லப்படுகின்றன.. கடந்த சில தினங்களுக்கு முன்பு, அவருக்கு காலில் ஆபரேஷன் செய்யப்பட்டது.. நீண்ட நேரமாக அவரால் ஒரே இடத்தில் நிற்க முடியாத நிலைமை இருப்பதால்தான், சேலத்திலேயே அவர் 20 நாட்களுக்கு மேல் தங்கியிருந்து ஓய்வு எடுக்கும்படி ஆகிவிட்டது.. சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை பார்க்ககூட எடப்பாடி பழனிசாமியால் வர முடியாத நிலைமை அப்போது இருந்தது.
ஸ்பெஷாலிட்டி: அதனாலேயே இந்த புதிய வாகனத்தை வாங்கியிருக்கிறாராம். இந்த காரை பொறுத்தவரை உள்ள ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், ஃபோர்ஸ் நிறுவனத்தின் அர்பானியா வகை வாகனம் மிகவும் விலை உயர்ந்தது என்கிறார்கள்.. இதில் உயரமான இருக்கைகள் இருக்குமாம்.. இந்தியாவில் முதல் முறையாக இந்த வகை வாகனங்களில் டிரைவர் மற்றும் டிரைவருக்கு பக்கத்தில் உட்காருபவர்களுக்கும் ஏர்பேக் வசதி இதில் இருக்கிறதாம்..
அதேபோல சீட்டில் உட்காருபவர்களுக்கு ஸ்பெஷலான ஏசி வெண்டிலென்ட்டும் இதில் அமைக்கப்பட்டிருக்குமாம். இந்தியாவில் முதல் முறையாக இந்த வகை வாகனங்களில் டிரைவர் மற்றும் டிரைவருக்கு பக்கத்தில் உட்காருபவர்களுக்கும் ஏர்பேக் வசதி இதில் இருக்கிறது.. மேலும், சீட்டில் உட்காருபவர்களுக்கு ஸ்பெஷலான ஏசி வெண்டிலென்ட்டும் இதில் அமைக்கப்பட்டிருக்கும்.. முன்பக்கம் உட்காரும் இருக்கையும் சற்று உயரமாக இருக்கிறது.. 2 பக்கமும் பாதுகாப்பு படையினர் நின்றுகொண்டு செல்லும் வசதிகளும் இதில் இருக்கிறது.
குறுகிய இடம்: வழக்கமாக, நீண்ட பயணங்களுக்கு எப்போதும் இன்னோவா மற்றும் டெம்போ டிராவலரை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தி வந்தார். ஆனால், அந்த கார்களில் கால் வைக்க குறுகிய இடம் மட்டுமே இருக்கிறது.. அதனாலேயே புதிய வகை காருக்கு அவர் மாற திட்டமிட்டதாக சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, பயணங்களின்போது காரினுள்ளே அவர் உட்கார்ந்திருப்பது, வெளியே நிற்கும் மக்களுக்கும் கட்சிக்காரர்களுக்கும் அவ்வளவாக தெரியவில்லை என்று கூறிவந்துள்ளார்கள்.
புதிய வாகனத்தை வாங்க இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள் அதிமுகவினர். இப்போது எங்கு சென்றாலும் இந்த காரில்தான் செல்கிறார்.. இது தொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் இணையத்தில் வலம்வருகின்றன.. அந்த காரில் எடப்பாடி முன்சீட்டில் உட்கார்ந்திருப்பதை தெளிவாக பளிச்சென காண முடிகிறது..
ஆக, உடல்ரீதியான தொந்தரவுகள் இருப்பதாலும், தேர்தல் பிரச்சாரத்துக்கு ஏற்ற வகையில் இருப்பதாலும்தான், இந்த வாகனத்தை எடப்பாடி பழனிசாமி வாங்கியதாக சொல்கிறார்கள்.. ஆனால், செல்லூர் ராஜூ மட்டும், இதற்கு ஒரு வித்தியாசமான காரணத்தை சொல்லி உள்ளார்.
செல்லூர் ராஜு: ஏன் திடீர்னு எடப்பாடி பழனிசாமி, புது கார் வாங்கியிருக்கிறார்? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.. அதற்கு மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ, "வேகம் வேகமாக போய் மக்களை சந்திக்க வேண்டும் என்பதால், இப்படி ஒரு கார் வாங்கியிருக்கிறார்.. ஏன்னா, எடப்பாடி பழனிசாமி வல்லவனுக்கு வல்லவன்" என்று ஒரே போடாக போட்டு, அங்கிருந்த மொத்த செய்தியாளர்களையும் வழக்கம்போல் மிரள செய்துவிட்டார் செல்லூர் ராஜூ.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications