இனி ஒரே திக்திக்தான்.. வருகிறது டிரைவர் இல்லாத மெட்ரோ.. வெளியான முக்கிய அப்டேட்... இதை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லா ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. இந்த மெட்ரோ ரயில்கள் ஆகஸ்ட் மாதம் களமிறக்கப்பட உள்ளன. .

ஓட்டுநர் இல்லா ரயில்களின் முதல் சேவை 2025 இல் தொடங்கப்படும். ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சோதனை ஓட்டம் நடைபெறும். தொடக்கத்தில், இந்த ரயில்களில் ரோவிங் உதவியாளர்களை வைத்திருக்க CMRL திட்டமிட்டுள்ளது. அதாவது கண்காணிப்பாளர்கள் உதவியுடன் டிரைவர் இல்லாத இந்த மெட்ரோ இயங்கும்.

First driverless train for Chennai Metro Ph-2 will arrive on this year August month

இவர்கள் டிரைவர் இல்லாத மெட்ரோ சரியாக இயங்குகிறதா என்று கண்காணிப்பார்கள். CMRL அதிகாரிகளின் அறிவிப்பின்படி, 138 மூன்று பெட்டிகள் கொண்ட டிரைவர் இல்லாத ரயில்கள் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் வாங்கப்படும்.

இந்த ரயில்கள் மூன்று வழித்தடங்களுக்கு மூன்று ஒப்பந்தங்களில் வாங்கப்படும். மாதவரம் முதல் சிப்காட் (காரிடார் 3), லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி (காரிடார் 4) மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் (காரிடார் 5) காரிடர்களுக்கு இந்த ரயில்கள் வாங்கப்படும்.

ஆட்டோமெட்டிக் ஏஐ தொழில்நுட்பம், ஜிபிஎஸ், சிக்னல் ரீடிங், டைமிங் சீகுவென்ஸ் ஆகிய தொழில்நுட்பங்களை அடிப்படையாக வைத்து இந்த மெட்ரோ ரயில்கள் இயங்கும். இந்த ரயில்கள் பொது பயன்பாட்டிற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு ஒரு வருடத்திற்கு விரிவான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ரயில்களுக்கான டிசைனிங் தற்போது செய்யப்பட்டு வருகிறது. அடுத்த ஒரு மாதத்தில் இந்த ரயில்கள் தயார் செய்யப்பட்டு அதன்பின் சோதனை முயற்சிகள் செய்யப்படும். பூந்தமல்லி மற்றும் போரூர் இடையே இயக்கப்படும் டிரைவர் இல்லாத 26 ரயில்களின் முதல் பேட்ச் அடுத்த ஆண்டு மத்தியில் வழங்கப்படும், என்று சென்னை மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும்.

இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

116 கிமீ இரண்டாம் கட்ட திட்டம் ₹61,843 கோடி செலவில் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 20-கிமீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை - 45.4 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

இங்கு நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி 2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும்.

மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்-பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ஆகியவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும்.

இதில் மாதவரம் மற்றும் தரமணி இடையே பாதை அண்டர் கிரவுண்ட் பாதையாகவும், சிறுசேரியில் உள்ள சிப்காட்டின் கடைசி நிலையம் வரை மேலே பாலம் அமைக்கப்பட்ட உயரமான பாதையாகவும் இருக்கும். அண்டர் கிரவுண்ட் பாதை அமைக்க அதிக நேரம் எடுக்கும். இன்னொரு பக்கம் மேலே பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்த பணிகள் எல்லாம் முடிந்து ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+