தாம்பரம்-செங்கல்பட்டு நான்காவது ரயில் பாதையில் முதல் குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி இடையிலான நான்காவது ரயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தாம்பரம் - செங்கல்பட்டு இடையே நான்காவது ரயில் பாதை அமைப்பதற்கான நிதியை மத்திய அரசு அறிவித்த ஓராண்டு காலத்திற்குள்ளேயே, நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட அடிப்படைப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. மேலும், கூடுவாஞ்சேரி முதல் செங்கல்பட்டு வரையிலான முதல் கட்டப் பணிக்காக ரூ. 273 கோடி மதிப்பீட்டில் டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ. 1,165 கோடி ஆகும். ஒப்பந்தப்புள்ளி மூலம் தேர்வு செய்யப்படும் நிறுவனம், முதல் கட்டப் பணிகளை 730 நாட்களில் (2 ஆண்டுகள்) முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒப்பந்தம் வழங்கப்பட உள்ளது. தாம்பரம் - செங்கல்பட்டு இடையே நான்காவது பாதை மொத்தம் 30 கி.மீ நீளமுள்ளது. இந்தப் பாதை, இரண்டு கட்டங்களாக அமைக்கப்பட உள்ளது. இதில், கூடுவாஞ்சேரி முதல் செங்கல்பட்டு வரையிலான 21 கி.மீ நீளத்திலான முதல் கட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.

First piece of good news regarding the fourth railway line between Tambaram and Chengalpattu work intensifies up to Guduvancheri fourth railway line between Tambaram and Chengalpattu -

இந்த பணிகள் நடக்கும் முன்பே கூடுவாஞ்சேரி முதல் தாம்பரம் வரையிலான 9 கி.மீ நீளத்திலான இரண்டாம் கட்டப் பணிக்கான ஒப்பந்தப்புள்ளிகள் தனியாக விரைவில் கோரப்படும். இந்த நான்காவது பாதை 2 ஆண்டுகளில் முடிந்த பின்னர், இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கையை சுமார் 25 சதவீதம் வரை அதிகரிக்க முடியும் என்று ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். இது தென் மாவட்டங்களிலிருந்து வரும் பயணிகளுக்குப் பெரிதும் பயனுள்ளதாக அமையும்; மேலும், பண்டிகைக் காலங்களில் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்கவும் வழிவகுக்கும் என தெரிகிறது.

தாம்பரம் - செங்கல்பட்டு ரயில் பாதை, தென் மாவட்டங்களுக்கான மிக முக்கியமான வழித்தடமாக இருக்கிறது. தினமும் 50-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களும், 250-க்கும் மேற்பட்ட புறநகர் ரயில்களும் இயக்கப்படுகிறது. தற்போது இந்த வழித்தடத்தில் மூன்று பாதைகள் மட்டுமே உள்ளதால், கூடுதல் ரயில்களை இயக்குவதில் ரயில்வே நிர்வாகத்திற்குச் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

நான்காவது பாதை அமையும்போது, இந்த வழித்தடத்தில் நெரிசல் குறைந்து, ரயில்களின் வேகத்தையும் அதிகரிக்க முடியும். இந்தப் பணியை மேற்கொள்ளும் நிறுவனம், நான்காவது பாதையை அமைப்பதுடன், நவீன சிக்னல் வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள், மின்மயமாக்கல் மற்றும் ரயில் பாதைகளில் தேவையான மாற்றங்களைச் செய்யும் பணிகளையும் மேற்கொள்ள இயலும்.

தற்போதுள்ள ரயில் பாதைகளுக்கு அருகிலேயே நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதால், நிலம் கையகப்படுத்துவதில் பெரிய சிக்கல்கள் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும், தாம்பரம் முதல் கூடுவாஞ்சேரி வரையிலான இரண்டாம் கட்டப் பணியின்போது, நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படலாம் அல்லது ரயில் நிலைய நடைமேடை வடிவமைப்புகளில் மாற்றங்கள் தேவைப்படலாம். இருப்பினும், இந்த ரயில் பாதை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைய வாய்ப்பு உள்ளது.

நான்காவது ரயில் பாதை வந்தே பாரத் மற்றும் பிற விரைவு ரயில்களுக்காக ஒதுக்கப்பட உள்ள. மற்ற பாதைகளை புறநகர் ரயில்களின் இயக்கத்திற்குப் பயன்படுத்தப்பட உள்ளது. விரைவு ரயில்களை நான்காவது பாதைக்கு மாற்றுவதன் மூலம், செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் வரை கூடுதல் புறநகர் ரயில்களை இயக்க முடியும். தற்போது, காட்டாங்கொளத்தூர், மறைமலை நகர், செங்கல்பட்டு மற்றும் சிங்கபெருமாள்கோவில் ஆகிய இடங்களில் விரைவு ரயில்களும் புறநகர் ரயில்களும் நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்படுகிறது

இதனால் புறநகர் மற்றும் விரைவு ரயில்களின் வருகையில் தாமதம் ஏற்படுகிறது. விரைவு ரயில்களுக்கு எனத் தனிப் பாதை ஒதுக்கப்பட்டால், புறநகர் மற்றும் விரைவு ரயில்கள் எங்கும் நிற்காமல் தடையின்றிச் செல்ல முடியும், இதன் மூலம் தாமதத்தைத் தவிர்க்கலாம். தற்போது விரைவு ரயில்களின் வேகம் மணிக்கு 110 கி.மீ முதல் 120 கி.மீ வரை உள்ளது. நான்காவது பாதை திட்டம் நிறைவடைந்ததும், இந்த வேகம் மணிக்கு 160 கி.மீ வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் ரயில் பாதை 1933-ல் செங்கல்பட்டு வரை அமைக்கப்பட்டது, இரண்டாவது பாதை 1957-ல் தாம்பரம் வரை உருவாக்கப்பட்டது. 1970-களில், சென்னை கிண்டியைக் கடந்து தாம்பரம் வரை விரைவான வளர்ச்சி ஏற்பட்டது. தற்போது, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) சென்னையின் எல்லையைச் செங்கல்பட்டு வரை நீட்டித்தது. கடந்த 30 வருடங்களில், தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு இடைப்பட்ட பகுதியில் பல குடியிருப்புப் பகுதிகள், தொழிற்சாலைகள், மென்பொருள் பூங்காக்கள், மறைமலை நகரில் சிப்காட் வளாகம், ஃபோர்டு கார் தொழிற்சாலை, வண்டலூர் உயிரியல் பூங்கா, கிளாம்பாக்கம் பேருந்து முனையம், தனியார் பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், புகழ்பெற்ற பள்ளிகள் மற்றும் வணிக வளாகங்கள் வந்துவிட்டன. சமீபகாலமாக, சென்னை நகரத்தை விட தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு இடைப்பட்ட புறநகர்ப் பகுதிகளில் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கிகறது

1980-களின் தொடக்கத்திலேயே இரண்டாவது ரயில் பாதை பயன்பாட்டில் இருந்தபோதிலும், இந்தப் புறநகர் வழித்தடத்தில் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. 2023 டிசம்பரில் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்பட்ட பிறகு, லட்சக்கணக்கான மக்கள் இந்த புதிய முனையத்தைப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். ஆனால், இதற்கு அருகிலுள்ள ஊரப்பாக்கம் ரயில் நிலையம் 1 கி.மீ-க்கும் அதிகமான தொலைவில் உள்ளது. கிளாம்பாக்கத்தில் ஒரு ரயில் நிலையம் கட்டப்பட்டு வருகிறது; இந்த நிலையம் திறக்கப்பட்ட பிறகு, புறநகர் ரயில்களைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நான்வாது ரயில் பாதை செயல்பாட்டுக்கு வந்த பிறகு, தாம்பரம் வரை வரும் அனைத்து ரயில்களையும் செங்கல்பட்டு வரை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை இயக்கவோ அல்லது தாம்பரம் வரை வரும் ரயில்களைச் செங்கல்பட்டு வரை நீட்டிக்கவோ ரயில்வே அதிகாரிகள் மறுத்துவிட்டனர். தற்போது, நான்காவது ரயில் பாதை அமைக்கப்பட்ட பிறகு, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரயில் சேவைகளை அதிகரிப்பதாக ரயில்வே நிர்வாகம் உறுதியளித்துள்ளது. ஆனால் அனைத்து மின்சார ரயில்களும் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+