Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டின் “டாப்பர்” ஆன மாஜி ஐஏஎஸ்.. முதல் தேர்தலிலேயே சாதித்த சசிகாந்த்.. அடுத்த இடத்தில் யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார் காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் வேட்பாளர் சசிகாந்த் செந்தில். இவர் முதல் முறையாக இப்போதுதான் தேர்தலைச் சந்தித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் பாஜக கூட்டணி 290 இடங்களிலும், இந்தியா கூட்டணி 235 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரை திமுக கூட்டணி ஒட்டுமொத்த 40 தொகுதிகளையும் வென்றிருக்கிறது. 2004 லோக்சபா தேர்தலுக்குப் பிறகு 40க்கு 40 அடித்து சாதித்திருக்கிறார் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணிக்கு தலைமை வகித்த ஸ்டாலின்.

MK Stalin lok sabha election 2024 lok sabha election result 2024 bjp congress india alliance 2024 2024 politics

தமிழ்நாட்டிலேயே மிக அதிக வாக்கு வித்தியாசம்: தமிழ்நாடு, புதுச்சேரியில் திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில்.

திருவள்ளூர் - சசிகாந்த் செந்தில்: திருவள்ளூரில் பாஜக வேட்பாளர் பொன் பாலகணபதியை விட 5 லட்சத்து 72 ஆயிரத்து 155 வாக்குகள் அதிகம் பெற்று வென்றுள்ளார் சசிகாந்த் செந்தில். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தமிழ்நாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற வேட்பாளர் என்ற அந்தஸ்தை பெற்றார் சசிகாந்த் செந்தில்.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில், கடந்த 2019 செப்டம்பரில் தனது ஐ.ஏ.எஸ் பணியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூகவலைதளப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றார்.

யார் இந்த சசிகாந்த் செந்தில்: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை பாஜக சார்பில் தேர்தல் களப்பணிக்காக அனுப்பப்பட்ட அதே வேளையில், காங்கிரஸ் சார்பில் கர்நாடகாவில் களமிறக்கப்பட்டார் சசிகாந்த் செந்தில். கர்நாடகா மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட சசிகாந்த் செந்தில் தேர்தல் வியூகங்களை வகுப்பதில் திறம்படச் செயல்பட்டார். கர்நாடகாவில் பாஜக ஆட்சியை அகற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருவதில் முக்கியப் பங்கு வகித்தார் சசிகாந்த் செந்தில்.

அதன்பிறகு காங்கிரஸ் கட்சியின் 'சென்ட்ரல் வார் ரூம்' தலைவராகவும் சசிகாந்த் நியமிக்கப்பட்டார். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் திருவள்ளூர் (தனி) தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு சசிகாந்த் செந்திலுக்கு வழங்கப்பட்டது. போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே, மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் சசிகாந்த் செந்தில்.

ஸ்ரீபெரும்புதூர் - டிஆர் பாலு: ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு, அதிமுக வேட்பாளர் பிரேம் குமாரை விட 4 லட்சத்து 87 ஆயிரத்து, 029 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். மாநிலத்திலேயே இரண்டாவது அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார் டிஆர் பாலு.

திண்டுக்கல் - சச்சிதானந்தம்: திண்டுக்கல் லோக்சபா தொகுதி சிபிஐஎம் வேட்பாளர் சச்சிதானந்தம், எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக்கை விட 4,43,821 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மாநிலத்திலேயே மூன்றாவது அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றிருக்கிறார் சச்சிதானந்தம். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திண்டுக்கல் வேலுசாமி மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் (5 லட்சத்து 38 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம்) வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி - கனிமொழி: தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி, 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

பெரம்பலூர் - அருண் நேரு: அதற்கு அடுத்தபடியாக பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு, 3,85,508 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அருண் நேரு (திமுக) தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை 3,89,107 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+