சட்டசபையில் முதல்முறையாக! எந்த முதல்வரும் செய்யாததை செய்த விஜய்! அப்படி என்னதான் பிரச்சினை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் முதல்முறையாக முதல்வர் விஜய் அவரது இருக்கையை விட்டுவிட்டு அமைச்சர்கள் அமரும் வரிசையில் அமர்ந்திருந்தார். அப்போது அமைச்சர் செங்கோட்டையனுடன் தீவிர ஆலோசனையையும் நடத்திக் கொண்டிருந்தார்.

தமிழக சட்டசபையில் வியாழக்கிழமை சிறுபான்மைத் துறை, சமூகநீதித் துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்றது.

நேற்று பிற்பகலுக்கு பிறகு சட்டசபைக்கு வந்த முதல்வர் விஜய், நேராக அவரது இருக்கைக்கு போகாமல் அமைச்சர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்திருந்தார். அவர் அமைச்சர்கள் ஆதவ் மற்றும் செங்கோட்டையனுக்கு இடையே அமர்ந்திருந்தார்.

CM Vijay in Minister seat

அதாவது அமைச்சர் அருண்ராஜின் இருக்கையில் அமர்ந்திருந்தார். அப்போது அமைச்சர் செங்கோட்டையனுடன் தீவிர ஆலோசனையில் இருந்தார். என்ன பேசிக் கொண்டிருந்தார் என்பது தெரியவில்லை.

ஆனால் முதல்வர் இருக்கையை விட்டுவிட்டு அமைச்சர் இருக்கையில் ஒரு முதல்வர் அமர்ந்தது இதுவே முதல்முறையாகும். பொதுவாக சபாநாயகர் இருக்கைக்கு தனி இருக்கை இருக்கும். அது போல் முதல்வருக்கென தனி சிறப்பு இருக்கை அமைக்கப்படும்.

முதல்வரின் இருக்கைக்கு அடுத்து மூப்பு அடிப்படையில் அமைச்சர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும். அது போல் 234 சட்டசபை உறுப்பினர்களுக்கும் அவரது பெயர் அகர வரிசைபடியின் சீனியாரிட்டி படியும் அமர வைக்கப்படுவர். ஒரு பக்கம் ஆளும் கட்சி, அவரது கூட்டணி கட்சியினர், மறுபக்கம் எதிர்க்கட்சியினர் அமர்ந்திருப்பர்.

சட்டசபை உறுப்பினர்கள் விவாதத்தின் போது பேசுவதற்காக தற்காலிகமாக இருக்கையை மாற்றுவது உண்டு. ஆநால் ஒரு முதல்வர் தனது தனி நாற்காலியை விட்டு சபை முடியும் வரை அமைச்சர்களுடன் இணைந்து அமர்வது இதுவே முதல்முறை!

திரைப்படத்திலிருந்து அரசியலுக்கு வந்து தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற விஜய்யின் ஒவ்வொரு நடவடிக்கை அரசியல் பார்வையாளர்களை கவனத்தை ஈர்த்து வருகிறது.

அப்படி செங்கோட்டையனுடன் அவர் என்ன பேசிக் கொண்டிருந்தார் என்பது குறித்து சமூகவலைதளங்களில் விவாதங்கள் எழுந்தன. ஒரு வேளை நேற்று அவையில் நடந்த பிரச்சனை குறித்து கேட்டறிந்தாரா, இல்லை வேறு துறை ரீதியாக ஏதாவது பேசியிருந்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

முதல்வர் விஜய் எப்போது எளிமையை விரும்புவார் என அவரது கட்சியினர் கூறி வருகிறார்கள். அந்த வகையில் அவர் அமைச்சருடன் அமர்ந்தாரா என தெரியவில்லை. செங்கோட்டையனுடன் பேச வேண்டும் என்றால் தனது அறைக்கு அழைத்துக் கூட பேசியிருக்கலாம்.

அமைச்சர் செங்கோட்டையன் விவரிக்க விவரிக்க விஜய் கைகளை கட்டியபடியே கேட்டுக் கொண்டிருந்தார். அது போல் எதிர்க்கட்சியினர் காமெடியாக பேசினால் விஜய் சிரித்தபடியே அமையில் அமர்ந்திருப்பார். பல நேரங்கள் சிரிப்பை அடக்க முடியாமல் விஜய் வாய் மீது கையை வைத்து மறைத்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+