இந்திய கடற்கரைகளிலேயே முதல் முறை.. இப்படி இருந்த சென்னை மெரினா.. மெட்ரோவால் இப்படி ஆகிடுச்சு
சென்னை: இந்திய கடற்கரைகளிலேயே எங்கும் இல்லாத ஒன்றாக கடற்கரையிலேயே மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது சென்னை மெரினாவில் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.
சென்னை மெட்ரோ ரயில் பணிகள் லைட் ஹவுஸ் பகுதியில் நடைபெற்று வருகின்றன. இதில் காந்தி சிலைக்கு பின்புறம் உள்ள மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையின் 7.02 மீட்டர் அகலம் மற்றும் 480 மீட்டர் நீளம் முழுவதும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த லைட்ஹவுஸ் மெட்ரோ ரயில் நிலையம் குறித்து சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜூனன் கூறும் போது, உங்களுக்கே தெரியும்.. சென்னை மெரினா உலகப்புகழ் பெற்ற கடற்கரை. அங்குள்ள கலங்கரை விளக்கத்தை பலரும் அறிவார்கள்.
இந்த கலங்கரை விளக்கம் ரயில் நிலையம் மாநில அரசின் ஒப்புதலோடு, மத்திய அரசின் ஒப்புதலோடு, பிரம்மாண்டமான ரயில் நிலையத்தை வடிவமைத்து வருகிறோம்.
கலங்கரை விளக்கம் ரயில் நிலையத்தின் நீளம் 416 மீட்டர் ஆகும். சென்னையின் எந்த மெட்ரோ ரயில் நிலையமும் இவ்வளவு நீளம் கிடையாது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் கூட 350 என்கிற அளவில் தான் இருக்கும். அகலமும் 35 மீட்டர் இருக்கும். தற்போதைய நிலையில் அகலத்தில் சென்டரல் ஸ்டேசன் தான் பெரியது. அதுகூட 31 மீட்டர் தான் இருக்கும். இது 35 மீட்டர் இருக்கும். இது தவிர்த்து 12 ரயில்களை இங்கு நிப்பாட்ட முடியும். ஏனெனில் இது டெரிமினல் ஸ்டேசன்..
இதனுடைய டெப்போ 26 கிமீ தூரம் தள்ளி பூந்தமல்லியில் இருக்கிறது. அங்கிருந்து காலியாக வந்தால் எரிபொருள் வீணாகும்.. அந்த இழப்பை தடுப்பதற்காக கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 12 ரயில்களை நிறுத்தும் அளவிற்கு ஆறு டிராக் டிசைன் செய்துள்ளோம்.. அதனால் தான் இந்த ஸ்டேசன் ரொம்ப பெரிய ஸ்டேசனாக இருக்கும்.

அதைவிட ரொம்ப முக்கியமான விஷயம்.. எல்லா ரயில் நிலையங்களிலும் கண்கோரஸ் மேலே இருக்கும். அதற்கு கீழே ரயில்கள் இருக்கும். இந்த ஒரு ரயில் நிலையத்தில் மட்டும் கண்கோரஸ் கீழே இருக்கும். ரயில்கள் மேலே இருக்கும். இந்த 416 மீட்டரில் 316 மீட்டரை கன்கோர்ஸ்கே அலார்ட் செய்திருக்கிறோம். ஏனெனில் அந்த இடத்தில் மக்கள் ப்ரியாக நேரத்தை கலங்கரை விளக்கம் ரயில் நிலையத்தில் செலவிட முடியும். டிராக்கிற்கு கீழ் 2000 முதல்3000 பேர் வரை ஒரே நேரத்தில் உள்ளே அமர முடியும் , அந்த அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளது" என்று கடந்த சில வாரம் முன்பு அளித்த பேட்டியில் கூறினார்.
இந்நிலையில் சுனாமியே வந்தாலும் பாதிக்கப்படாத வகையில் மெரினா கலங்கரை விளக்கம் ரயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது. சென்னை மெரினாவின் பழைய படத்தையும் புதிய படத்தையும் பார்ப்பவர்கள் நிச்சயம் வியந்து போவார்கள். அந்த அளவிற்கு மாறி உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications