இந்தியாவிலேயே No.1.. தமிழ்நாட்டிலேயே பெஸ்ட் உணவு நகரம்.. சென்னைக்கு எந்த இடம் தெரியுமா? பலே இட்லி

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலக அளவில் நம் இந்தியாவின் உணவுகள் பிரசித்தி பெற்றுள்ளது.. இது தொடர்பாக ஆய்வு ஒன்று நடத்தப்பட்டு, அந்த லிஸ்ட்டும் வெளியாகி உள்ளது. இதில் நம்முடைய சென்னை எந்த இடத்தை பிடித்திருக்கிறது தெரியுமா?

உலகில் பல கோடி உணவு வகைகள் இருந்தாலும், இத்தாலியன், இந்தியன், சைனீஸ் போன்ற பாரம்பரிய உணவு வகைகளுக்கு எப்போதுமே மவுசு அதிகமாகவே உள்ளது.. அதிலும், வெளிநாடுகளுக்கு குடியேறிய இந்தியர்களால், பரவ தொடங்கிய இந்திய உணவுகளின் புகழானது, இப்போது உலகம் முழுவதுமே பரவிவிட்டது..

First time in India, best food cities in the world and Do you know Chennai came 65th place

உணவு வகைகள்: இதில் ஒருசில உணவுகளை, வெளிநாட்டவர் அதிகம் சாப்பிடுவதால், அத்தகைய உணவுகளுக்கு வெளிநாடுகளில் கூடுதல் மவுசு இருந்து கொண்டே இருக்கிறது. ஆனால், நம்முடைய நாட்டை பொறுத்தவரை, உணவுக்கு எப்போதுமே தனி முக்கியத்துவம் தரப்படும்.

காரணம், ஒரு நகரத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் அடையாளமாக திகழக்கூடியது அங்குள்ள உணவுகள்தான்.. இந்த உணவுகள், நகரத்துக்கு நகரம் வேறுபடும்போது, மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடவே செய்யும்.

முக்கியத்துவம்: அந்தவகையில், உள்ளூர் உணவின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அனுபவமிக்க பயண ஆன்லைன் வழிகாட்டி நிறுவனம் ஒன்று சமீபத்தில் உலக அளவில் ஆய்வு ஒன்றை நடத்தியது.. அதன்படி, சிறந்த உணவு நகரங்கள் பட்டியலையும் வெளியிட்டிருந்தது.

அந்த லிஸ்ட்டில், மும்பை, ஐதராபாத், டெல்லி, சென்னை, லக்னோ ஆகிய 5 நகரங்களும் முதல் 100 இடங்களுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளன.. மும்பையை பொறுத்தவரை, நிறைய ஸ்வீட் உணவுகள் பிரபலமாகும். ஆனாலும், மும்பையில் ஆலு டிக்கி கோல் கபே, சாட் பூரி, பேல் பூரி, ரக்தா பாட்டிஸ் வட பாவ் மற்றும் பாவ் பாஜி போன்ற உணவுகள் உலக அளவில் பிரசித்தி பெற்றவையாக உள்ளதாம். அந்தவகையில், 35-வது இடத்தை மும்பை பெற்றுள்ளது..

ஹைதராபாத்:
நம்முடைய அண்டை மாநிலமான ஹைதராபாத் 39-வது இடத்தை பிடித்திருக்கிறதாம். இத்தனைக்கும் ஹைதராபாத் பிரியாணி என்றாலே நாக்கில் எச்சில் ஊறும். என்றாலும், உள்ளூர் உணவுகளையும்இவர்கள் விரும்பி சாப்பிடுகிறார்களாம். குறிப்பாக, ஹலீம், சிக்கன் 65, கபாப், சமோசா, பாயா மற்றும் நிஹாரி ஹைதராபாத்தில் ரசிக்கக்கூடிய உணவுகளாக உலக அளவில் இடம் பெற்றுள்ளது.

நம்முடைய சென்னை எந்த இடத்தில் உள்ளது தெரியுமா? 65-வது இடத்தை பிடித்திருக்கிறதாம்.. நம்ம சென்னையின் இட்லி, தோசைக்கு உலக அளவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது பெருத்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+