‛ரேர் கேஸ்’.. அமைச்சரவையில் செந்தில் பாலாஜி நீக்கம்! அமைச்சரை ஆளுநரே நீக்குவது இதுதான் முதல் முறையா?
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரை மற்றும் அவரது அனுமதியின்றி செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்வதாக ஆளுநர் ஆர்என் ரவி அறிவித்துள்ளார். இது தற்போது பெரிய விவாதத்தை கிளப்பி உள்ள நிலையில் இந்தியாவில் முதல் முறையாக முதல்வர் அனுமதியின்றி ஆளுநரே அமைச்சர் ஒருவரை நீக்கம் செய்திருப்பது இதுதான் முதல் முறையா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அதுபற்றி இங்கே பார்ப்போம்.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இதற்கிடையே போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி அதிமுக ஆட்சியில் பணம் வசூலித்த வழக்கில் செந்தில் பாலாஜி சிக்கியிருந்தார்.
மேலும் இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரித்தனர். இந்த விசாரணையை தொடர்ந்து அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளனர். தற்போது அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் நீதிமன்ற காவலில் மருத்துவமனையில் ஓய்வில் உள்ளார்.

இதற்கிடையே தான் முதல்வர் ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று செந்தில் பாலாஜியிடம் இருந்த மின்சாரத்துறை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் வழங்க ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புக்கொண்டார். ஆனால் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை தொடர அவர் அனுமதி வழங்கவில்லை.
இதையடுத்து ஆளுநர் ஆர்என் ரவியின் எதிர்ப்பை மீறி செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என அரசாணை வெளியிட்டார். இதற்கிடையே தான் செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து இன்று ஆளுநர் ஆர்என் ரவி அறிவிப்பு வெளியிட்டார். இது தமிழக அரசியலில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி அசை்சராக தொடர்ந்தால் அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி சட்டம் மற்றும் நீதிக்கான விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படலாம். தற்போது அவர் அமலாக்கத்துறையின் வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ளார். இதனால் அமைச்சர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தான் மாநில முதல்வராக இருப்பவரின் அனுமதியின்றி ஆளுநர் ஒருவரே கைது செய்யப்பட்ட அமைச்சர் ஒருவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்திருப்பது இதுதான் தான் முதல் முறை என்ற தகவல்கள் இணையதளங்களில் பரவி வருகிறது. இதுபற்றி தேடியபோது சமீபத்தில் இதுபோன்று முதல்வர் ஒருவரின் அனுமதி அல்லது பரிந்துரையின்றி எந்தவொரு ஆளுநரும் அமைச்சரவையில் இருந்து அமைச்சர் ஒருவரை நீக்கம் செய்தது இல்லை என்பதும், ஆளுநர் ஆர்என் ரவியின் செயல்பாடு என்பது ‛ரேர்' மற்றும் வழக்கத்துக்கு மாறான நிகழ்வாக அமைந்து இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதனால் தான் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் ஆர்என் ரவி அதிரடியாக நீக்கம் செய்திருப்பது பெரும் அதிர்வலைகளோடு விவாதத்தை கிளப்பி உள்ளது. ஏனென்றால் பல வழக்குகள் நீதிமன்றங்கள் ஆளுநர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலைவராக இருக்கும் முதல்வர் பரிந்துரை செய்யும் நபரை அமைச்சராக நியமனம் செய்ய வேண்டும். அவர் பரிந்துரைக்கும் நபரை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் ஆளுநர் என்பவர் மாநில முதல்வர் தலைமையிலான அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்து இருக்கிறது.
இதற்கிடையே தான் ஆளுநர் ஆர்என் ரவியின் இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. மேலும் ஆளுநர் ஆர்என் ரவியின் இந்த நடவடிக்கையை திமுக சட்ட ரீதியாக எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதனால் மீண்டும் தமிழக அரசு மற்றும் ஆளுநர் ஆர்என் ரவி இடையேயான மோதல் என்பது விஸ்வரூபமெடுக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications