Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அசால்ட்டாக சென்னையில் "மலர்ந்த" விஜய்.. மூக்கை துளைத்த மட்டன் கறிச்சோறு.. புது ரூட்டை பிடித்த தவெக

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் கட்சியின் கொடி அறிமுக விழா நிகழ்வுகள், பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகின்றன.. அத்துடன், சில முக்கிய நடைமுறைகளையும் விஜய் கட்சியினர் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருவது, பலரையும் ஈர்க்க துவங்கியிருக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியில் மேலும், கீழும் சிவப்பு வண்ணமும், நடுவில் மஞ்சள் வண்ணமும் உள்ளது. இதில் மஞ்சள் நிறத்தின் மத்தியில் வாகைப் பூவும், அதன் இருபுறங்களிலும் முன்னங்காலை தூக்கியபடி, பிளிறும் 2 யானைகளின் உருவமும் பொறிக்கப்பட்ட கொடியை நடிகர் விஜய் கடந்த மாதம் அறிமுகப்படுத்தியிருந்தார்.

chennai vijay tvk flag

நடிகர் விஜய்: அதாவது, கொடியின் மேலேயும், கீழேயும் அடர் சிவப்பு நிறமும், நடுவில் மஞ்சள் நிறமும், வாகை மலரை சுற்றி பச்சை, நீல நிற நட்சத்திரங்கள் மிளிர, அதன் 2 பக்கமும் கம்பீரமாக கால்களை உயர்த்தியபடி 2 யானைகள் நிற்பதுபோல கொடி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கொடி அறிமுகப்படுத்தி நாளிலேயே, பல்வேறு விமர்சனங்கள், சர்ச்சைகள் கிளம்பின.

யானை சின்னம் இருப்பதற்கும், வாகை பூவை பயன்படுத்தி இருப்பதற்கும், பல்வேறு தரப்பினர் புகார்களை போலீசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் தந்து, மேலும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டனர்.. கட்சிக்கொடியை விஜய் அறிமுகப்படுத்தி 24 மணி நேரத்துக்குள்ளாகவே அத்தனை சலசலப்பும் கிளம்பியது.

chennai vijay tvk flag

சர்ச்சைகள்: அதனால்தான், கட்சிக் கொடி விவகாரத்தில் அடுத்த என்ன செய்யலாம் என தமிழக வெற்றிக் கழகம் புதிய முடிவு எடுத்து உள்ளதாக தகவல்கள் கசிந்தன.. தேவைப்பட்டால், யானை சின்னம் குறித்து, தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டால் பதில் அளித்துக் கொள்ளலாம் என்றும் விஜய் தரப்பு முடிவு செய்திருப்பதாக கூறினார்கள்.

இந்த சர்ச்சைகள் ஒருபக்கம் இருந்தாலும், மறுபக்கம் விஜய் கட்சியின் கொடியை தமிழகம் முழுவதும், கட்சி நிர்வாகிகள் அறிமுகப்படுத்தி வருகிறார்கள். இந்த அறிமுக விழாக்கள் ஒவ்வொன்றையும் வெகு சாதாரணமாக அல்லாமல், பொதுமக்கள் கவரும் வண்ணம் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

அறிமுக விழா: இப்படித்தான் கடந்த வாரம் மதுரையில் நடத்தப்பட்ட விழாவொன்று இணையத்தில் இப்போது வரை பேசுபொருளாகியிருக்கிறது.. மதுரை கருப்பாயூரணியை அடுத்துள்ள பகுதி ஓடைப்பட்டி பகுதியில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி அறிமுக விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடத்தப்பட்டது.. 300க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

chennai vijay tvk flag

இந்த கூட்டத்தில், 50 அடி உயர கொடி ஏற்றிவைக்கப்பட்டு, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. மதுரை ஓடைப்பட்டி பகுதியில், 50 அடி உயர கொடியை மதுரை மாவட்ட(வடக்கு) தலைவர் விஜய் அன்பன் கல்லனை ஏற்றி வைத்தார்..

நலத்திட்ட உதவிகள்: அப்போது மாணவர்களுக்கு ரூ.35000 கல்வி உதவித்தொகையும், 5 பேருக்கு குலுக்கல் முறையில் ஆட்டு குட்டிகளும் நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டன.. மேலும் ஒருவருக்கு இஸ்திரி பெட்டி வண்டியும், 50க்கும் மேற்பட்டோருக்கு முதியோர் உதவி தொகையும் வழங்கப்பட்டது. இறுதியில், கொடி அறிமுக விழாவை முன்னிட்டு, 1000 பேருக்கு கமகமவென சமபந்தி அசைவ விருந்து பரிமாறப்பட்டது. அதாவது, தமிழகத்திலேயே முதல்முறையாக 50 அடி உயர கொடி ஏற்றி வைத்து 1000 பேருக்கு சமபந்தி அசைவ விருந்து வழங்கப்பட்டது இந்த மதுரையில்தான்.. எனவே, மதுரை கொடி அறிமுக விழா என்பது பலரது கவனத்தையும் பெற்றது.

நேற்றைய தினமும் விஜய் ரசிகர்கள் அம்பத்தூரில் கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.. இந்த நிகழ்விலும், ஆயிரம் பேருக்கு கட்சிக் கொடி, சிக்கன் பிரியாணி வழங்கி, நல திட்டங்களோடு கொண்டாடியிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்..

அறிமுக விழா: மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் அம்பத்தூரில் நடந்த கட்சிக்கொடியின் அறிமுக விழா கொண்டாட்டத்தில், 1000 பேருக்கு சிவப்பு மஞ்சள் நிறத்தில் யானை உருவத்துடன் கூடிய த.வெ.க கட்சி கொடி வழங்கப்பட்டது.. இந்த விழாவில் கலந்து கொண்ட கூலித் தொழிலாளிகளுக்கு கட்சி கொடியை வழங்கினார்கள்.. .

அதேபோல, பெண்கள், இளைஞர் என அனைவருக்கும் கட்சிக் கொடியை வழங்கி மகிழ்ந்தனர்.. பிறகு மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், பொதுமக்களுக்கு வேட்டி, சேலை அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.. இறுதியில் சுமார் ஆயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டது.

மட்டன் பிரியாணி: கொடியை அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு இடத்திலும், 50 அடிக்கு கட்சி கொடியை ஏற்றி வைப்பதுடன், நலத்திட்ட உதவிகளையும், மட்டன் பிரியாணி, கோழி பிரியாணி என 1000 பேருக்கு பரிமாறுவதையும் விஜய் கட்சியின் நிர்வாகிகள் வழக்கமாக வைத்துள்ளனர். இது பொதுமக்களின் கவனத்தை வெகுவாக பெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+