பயணிகளுக்கு அடுத்தடுத்து ஸ்வீட் நியூஸ்.. வந்தே மெட்ரோ ரயில் சேவை எப்போது? ரயில்வே அமைச்சர் விளக்கம்
சென்னை: 150 - 200 கி.மீ. துாரம் வரை உள்ள நகரங்களுக்கு இடையே இயக்கும் விதமாக 12 பெட்டிகள் கொண்டதாக வந்தே மெட்ரோ ரயில்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. மேலும் பல சொகுசு வசதிகளும் இந்த ரயிலில் இருக்கிறது. இந்த நிலையில் பயணிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக வந்தே மெட்ரோ ரயில் சேவைகள் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற தகவலை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
தற்போது நாடு முழுவதும் வந்தே பாரத் என்ற சொகுசு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் 50 - க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் தற்போது வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 8 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயிலின் பெட்டிகள் வழக்கமாக உள்ள ரயில் பெட்டிகளில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ளது.

அதி நவீன சொகுசு வசதிகள் கொண்டதாக இந்த ரயில்கள் உள்ளன. தற்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் அனைத்தும் இருக்கை வசதி கொண்டது ஆகும். இதனால், விரைவில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதேபோல குறுகிய தொலைவு கொண்ட இரு நகரங்களுக்கு இடையே வந்தே மெட்ரோ ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
வந்தே மெட் ரோ ரயில்களில் சார்ஜிங் வசதி, டாய்லெட் வசதி, முழுவதும் ஏசி என பல சொகுசு வசதிகளுடன் தயாரிக்கப்பட்டு வருகிறது. 150 கி.மீ. முதல் 200 கி.மீ. துாரம் வரை உள்ள நகரங்களுக்கு இடையே இயக்கும் விதமாக இந்த ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது.. மொத்தம் 12 பெட்டிகள் கொண்டதாக இந்த ரயில் இயக்கபடுகிறது.
இந்த ரயிலை, கடந்த ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி சென்னை - ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ரோடு இடையே, மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இயக்கி வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.. அதனால், சென்னை - காட்பாடி அல்லது திருப்பதி, சென்னை - புதுச்சேரி இடையே இயக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால், மும்பைக்கு இந்த ரயில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
எனினும், சென்னை- திருப்பதி உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் இந்த ரயில் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் நிலவுகிறது. இந்த நிலையில் தான் வந்தே மெட்ரோ ரயில் எப்போது இயக்கப்படும்? என்பது தொடர்பான முக்கிய அப்டேட் ஒன்றை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கொடுத்துள்ளார். இது தொட்ர்பாக அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:-
வந்தே மெட்ரோ ரயில் அடுத்த மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும். அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் இந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம். அதன்பிறகு பல ரயில்கள் ஒப்படைக்கப்படும். இரண்டு வந்தே மெட் ரோ ரயில்கள் அனைத்து சோதனைகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. முதல் வந்தே மெட்ரோ ரயில் அடுத்த மாதம் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவில் தரம் இல்லை என்று பயணிகள் அடிக்கடி குற்றம் சாட்டுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அஸ்வினி வைஷ்ணவ், "ரயில்களில் நாள்தோறும் 12 லட்சம் முதல் 13 லட்சம் உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான புகார்களே வருகின்றன. எனினும், இதையும் சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட கேட்டரிங்க் ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications