சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ப்ரிடேட்டர் தெரியுமா! கடலில் வேட்டை தாண்டவம் ஆடிய ராட்சச மீன்! முதல்முறை வீடியோவில் சிக்கிய அதிசயம்

Google Oneindia Tamil News

சென்னை: கடலில் மிகப்பெரிய சுறா மீன்களை வேட்டை ஆடும் வெள்ளை திமிங்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இந்த மீன்களின் வீடியோக்கள் முதல்முறையாக வெளியாகி உள்ளன.

கடலில் நமக்கு தெரியாத பல மீன் வகைகள் உள்ளன. அதோடு நமக்கு தெரிந்த மீன் வகைகள் கூட வினோதமான பல குணங்களை கொண்டு இருக்கின்றன.

கடலும், காடும் ஒன்றுதான். இரண்டிலும் மனித குலத்திற்கு தெரியாத பல சுவாரசியங்கள், ரகசியங்கள் அடங்கி இருக்கின்றன.

அந்த வகையில் பல காலமாக ரகசியமாக இருந்து வந்த ஒரு விஷயம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அப்படியே விழுங்கிய திமிங்கலம்! தொண்டை வரை போன நபர்.. உயிருடன் திரும்பி வந்த அதிசயம்! பரபர சம்பவம் அப்படியே விழுங்கிய திமிங்கலம்! தொண்டை வரை போன நபர்.. உயிருடன் திரும்பி வந்த அதிசயம்! பரபர சம்பவம்

 திமிங்கலங்கள்

திமிங்கலங்கள்

அதன்படி திமிங்கலங்களில் orca என்ற வகை உள்ளது. இவை கூரான பற்கள் கொண்ட கொடூரமான திமிங்கலங்கள் ஆகும். இவை கடலின் ப்ரிடேட்டர் என்று அழைக்கப்படும். அதாவது கடலின் வேட்டை மன்னன். இவை பொதுவாக சிறிய மீன்களை கொன்று உயிர் வாழும். அதே சமயம் இந்த ராட்சச கொலைகார திமிங்கலங்கள் பெரிய சுறா மீன்களையும் வேட்டை ஆடும் என்று கூறப்பட்டு வந்தது. பெரிய சுறா மீன்களை கடித்து, பீஸ் பீஸாக மாற்றி சிங்கத்தை போல இது வேட்டையாடும் என்று கூறப்பட்டு வந்தது.

ஆதாரங்கள்

ஆதாரங்கள்

ஆனால் இதற்கான ஆதாரங்கள் வெளியாகாமல் இருந்தன. இந்த நிலையில்தான் முதல்முறையாக இந்த orcas திமிங்கலங்கள் சுறா மீன்களை வேட்டையாடும் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த திமிங்கலங்கள் கூட்டமாக வந்து ஒரு பெரிய சுறா மீனை பிடித்து கடித்து கொன்றுள்ளன. காட்டில் புலிகள் கூட்டமாக சேர்ந்து வேட்டை ஆடும். அதேபோல்தான் இந்த திமிங்கலங்கள் சேர்ந்து ஒரு சுறா மீனை வேட்டையாடி உள்ளன.

தென்னாபிரிக்கா

தென்னாபிரிக்கா

இந்த சம்பவம் தென்னாபிரிக்காவில் உள்ள தெற்கு கேப் கடல் பகுதியில் நடந்து உள்ளது. அந்த வழியாக சென்ற ரோந்து ஹெலிகாப்டர் ஒன்று இதை வீடியோவாக படம் பிடித்து உள்ளது. இதற்கு முன் இந்த திமிங்கலங்கள் சுறாவை வேட்டையாடும் விஷயம் என்பது வெறும் கட்டுக்கதையாக மட்டுமே இருந்தது. தற்போது அது நிஜம் என்பது வீடியோ மூலம் உறுதியாகி உள்ளது. இது போன்ற ப்ரிடேட்டர் திமிங்கலங்கள் பொதுவாக அதிக அறிவுத்திறன் கொண்டது ஆகும்.

 வீடியோ

வீடியோ

இவை சிறிய மீன்களை வேட்டையாடும் என்பது பலருக்கும் தெரிந்ததுதான். இவைதான் கடலின் டாப் கொலைகார மீன்கள் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இவை சுறாவை வேட்டையாடுவதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. முதல்முறை இதற்கான ஆதாரங்கள் வீடியோவுடன் வெளியாகி உள்ளன. புலி ஒன்றை சிங்கங்கள் சேர்ந்து வேட்டையாடினால் எப்படி இருக்கும். அப்படித்தான் பெரிய சுறாவை திமிங்கலங்கள் ஒன்று சேர்ந்து இந்த வீடியோவில் வேட்டை ஆடி உள்ளன.

English summary
First video of Orcas Whales eating a White Shark emerged in internet .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X