உயரே பறக்கும் காய் விலை.. 1 கி வெங்காயம் ரூ.80.. இந்த லிஸ்ட்டை பாருங்க.. சடசடனு சரியும் மீனின் விலை
சென்னை: புரட்டாசி மாசம் என்றாலே, மீன் விலை வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், காய்கறிகளின் விலைகளோ, கணிசமாக உயர்ந்து, இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை தந்து வருகிறது
தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதமான புரட்டாசியில் ஆடு, மாடு, கோழி, கடல் உணவுகளின் விலை கடுமையாக சரிவடைவது வழக்கம்.. காரணம் புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் அசைவ உணவை உண்ண மாட்டார்கள்..

புரட்டாசி மாதம்: அந்தவகையில், இந்த வருடமும் புரட்டாசி மாதம் தொடங்கியிருக்கிறது.. இதனால், ஆடு, மாடு, கோழி, முட்டை, மீன்களின் விலை குறைந்து காணப்பட்டு வருகிறது. இறைச்சியை குறைவான அளவிலேயே வாங்கி வியாபாரிகள் விற்பனை செய்யும் சூழலும் ஏற்பட்டுள்ளது. நேற்றுகூட, ராமேஸ்வர மீனவர்கள் கடலுக்கு சென்றுவந்தார்கள்.
மீன் வரத்து: கடல் கொந்தளிப்பு, மீன் வரத்து குறைவு போன்ற காரணங்களினால், பாம்பன் மீனவர்கள் 12 நாட்களுக்கு கடலுக்கு செல்லவில்லை.. கடந்த 8ம்தேதிதான், விசைப்படகுகளில் மீன் பிடிக்க போனார்கள்.. மன்னார் வளைகுடா ஆழ்கடலில் மீன்பிடித்து விட்டு நேற்று கரை திரும்பினார்கள். ஆனால், 12 நாட்களுக்கு பிறகு, எதிர்பார்த்த பெரிய ரக மீன்கள் எதுவுமே சிக்கவில்லையாம். எனவே, மீனுக்கு 10 முதல் 20 சதவீதம் வரை விலை குறைந்தது.
ஒரு கிலோ சிறிய ரக பாரை மீன் ரூ. 80 (பழைய விலை ரூ.100), ஊழி மீன் ரூ. 90 (ரூ. 110), நகரை மீன் ரூ.200 (ரூ.230), மாஊழா ரூ.200 ( ரூ. 250), காரல் ரூ.50 (ரூ.70), என வியாபாரிகள் வாங்கியதால் மீனவர்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளானார்கள்.. அசைவ பிரியர்கள் சைவ உணவுக்கு மாறிவிட்டதால், மீன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
எகிறிய விலை: ஆனால், காய்கறி விலையோ உச்சத்துக்கு எகிறிவிட்டது. அதிலும், கடந்த வாரத்தை ஒப்பிடும்போது, இந்த வாரம் காய்கறி மற்றும் பழங்களின் விலை ஏகத்துக்கும் உயர்ந்துவிட்டது.
இந்த லிஸ்ட்டை பாருங்க:
காய்கறி விலை பட்டியல்:
பீன்ஸ் - ரூ.70
அவரை - ரூ.60
கத்தரி - ரூ. 25
வெண்டைக்காய் - ரூ. 15
புடலங்காய் - ரூ.15
பீர்க்கங்காய் - ரூ.30
பச்சை மிளகாய் - ரூ.20
கேரட் ரூ. 40 வெங்காயம் - ரூ.80
சேனைக்கிழங்கு - ரூ.40
முருங்கைக்காய் - ரூ. 80
உருளைக்கிழங்கு - ரூ.25
பழங்கள் விலை:
ஆப்பிள் - ரூ.200
மாதுளை - ரூ. 250 சாத்துக்குடி - ரூ. 50
கமலா ஆரஞ்சு - ரூ.70
அண்ணாச்சி - ரூ.80
பட்டர் புரூட் - ரூ.120
சீதாப்பழம் - ரூ. 50
-
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications