வஞ்சிரம் மீன் கெஞ்சுர மீன் ஆயிருச்சு! காசிமேடு காத்தடிக்குது! சட்டுனு வண்டிய எடுத்துட்டு போங்க சார்!
சென்னை: எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை காசிமேடு மீன் மார்க்கெட் தற்போது களையிழந்து காணப்படுகிறது. புரட்டாசி கடைசி சனிக்கிழமை முடிவடைந்தாலும் புரட்டாசி மாதம் இன்னும் முடிவடையாததால் மீன்கள் விற்பனை மந்தமாகவே நடைபெற்றது. கடந்த மாதம் 1200 ரூபாய் விற்கப்பட்ட ஒரு கிலோ வஞ்சிரம் மீன் 600 ரூபாய் முதல் 800 ரூபாய் வரையில் விற்பனையாகிறது. அதே நேரத்தில் அடுத்த வாரம் புரட்டாசி முடிவடைந்து தீபாவளி பண்டிகை வருவதால் அதிக அளவில் மீன் விற்பனை நடைபெறும் என நம்பிக்கையை தெரிவிக்கின்றனர் மீன் வியாபாரிகள்.
தமிழகத்தில் சென்னை எண்ணூரில் தொடங்கி கன்னியாகுமரி வரை விரிந்துள்ள வங்கக்கடலும், கன்னியாகுமரியின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள அரபிக்கடலும் தமிழக மீனவர்களின் வாழ்வாதார தளமாக உள்ளன.
சென்னை முதல் ராமநாதபுரம் வரையிலான எட்டு கடலோர மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான மீனவர்கள் கட்டுமரம், ஃபைபர் படகு, சிறிய தோணி, ஆழ்கடல் மீன்பிடி கப்பல்கள் போன்ற பல்வேறு வகை படகுகளைப் பயன்படுத்தி தினசரி கடலில் இறங்குகின்றனர்.

கடலோர மீனவர்கள்
அவர்கள் பிடிக்கும் மீன்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் தமிழகத்தின் மிகப் பெரிய மீன் சந்தையாகும். இங்கு கடலில் இருந்து பிடித்து வரப்படும் மீன்கள் நேரடியாக ஏலத்தில் விற்கப்படுவதால், சில்லறை விற்பனையாளர்கள் மக்களுக்கு குறைந்த விலையில் மீன்களை விற்பனை செய்து வருகின்றனர். வஞ்சிரம், வவ்வால், பால் சுறா, கடம்பா, பாறை, நெத்திலி, சீலா, கானாங்கெளுத்தி, இறால், கெண்டை, சங்கரா உள்ளிட்ட மீன்கள் பெரும்பான்மையாக காசிமேட்டில் விற்பனைக்கு வருகின்றன.
காசிமேடு மீன் மார்க்கெட்
இதில் வஞ்சிரம் எப்போதும் விலையில் முதலிடத்தில் திகழ்கிறது. அந்த மீன் மட்டும் கிலோவுக்கு ரூ.1,200 வரை விலை போகும் என்பது குறிபிடத்தக்கது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 4 மணி முதலே காசிமேட்டில் மக்கள் கூட்டம் நிரம்பி வழக்கும். ஆனால் தற்போது புரட்டாசி மாதம் என்பதாலும், விசேஷ நாட்கள் இல்லாமல் இருப்பதாலும், மீன் வாங்குபவர்கள் குறைந்துள்ளனர். இதனால் மீன் விலை பெரிய அளவில் சரிந்துள்ளது.
சென்னை மீன் விலை
தற்போதைய சுழலில் வஞ்சிரம் கிலோ ரூ.1,200லிருந்து ரூ.800 ஆகவும், வவ்வால் ரூ.800ல் இருந்து ரூ.600 ஆகவும், கடம்பா ரூ.500ல் இருந்து ரூ.350 ஆகவும் குறைந்துள்ளது. விலை குறைந்திருந்தாலும் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். புரட்டாசி மாதம் முடிவடைய இன்னும் சில நாட்கள் இருப்பதால், விலை குறைந்தே இருக்கும் எனவும், தீபாவளி பண்டிகை நெருங்கிவருவதால் அடுத்த வாரம் முதல் மீன்களின் விலை மீண்டும் உயரும் எனவும் மீன் வியாபாரிகள் கூறுகின்றனர்.
மீன் விற்பனை குறைவு
அதே நேரத்தில் புரட்டாசி மாதத்தில் விரதம் கடைபிடிக்காதவர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டம் தான். மீன்கள் விலை பெரும்பாலும் குறைந்தே காணப்படுவதால் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடும் மீன் பிரியர்கள் அங்கு படை எடுத்து வருகின்றனர். தற்போது காசிமேட்டுக்கு மீன் வாங்க சென்றால் மிக குறைந்த விலையில் கிடைக்கும் என்கிறார்கள் மீன் வியாபாரிகள். இதனால் பெரிய அளவில் கூட்டம் இல்லாவிட்டாலும் மீன் பிரியர்கள் அங்கு குறைந்த விலையில் மீன்களை வாங்கி செல்கின்றனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications