செந்தில் குமாரின் ஹார்ட் டிஸ்க் முழுக்க.. நிரம்பி வழிந்த ஆபாச வீடியோக்கள்.. அதிர்ந்து போன போலீஸ்!

ஊழியரின் ஹார்ட் டிஸ்க்கில் ஆபாச வீடியோக்கள் உள்ளதாக கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: செந்தில்குமாரின் ஹார்டு டிஸ்க்கில் எக்கச்சக்கமான ஆபாச வீடியோக்கள் இருந்ததாம்.. அவ்வளவும் கூட வேலை பார்க்கும் பெண் ஊழியர்களின் ஆபாச வீடியோக்களாம்.. 150-க்கும் மேற்பட்ட இந்த ஆபாச வீடியோவை கண்டு அதிகாரிகள் கடுமையான அதிர்ச்சியில் உள்ளனர்.

பாலவாக்கத்தைச் சேர்ந்த தம்பதி செந்தில்குமார் - சித்ரா. 35 வயதான செந்தில்குமார், அடையாறில், தனியார் இறால் இறக்குமதி ஆபீசில் அக்கவுண்டன்ட்-ஆக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 9 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்.

இந்நிலையில், இவர்களது அலுவலகத்தில் கடந்த 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வருமான வரித்துறையினர் ரெயிடு நடத்தி உள்ளனர். இதில், சில ஆவணங்கள், கம்ப்யூட்டர் டிஸ்க்குகளையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்துள்ளனர். அப்போது செந்தில்குமாரிடமும் விசாரணை நடந்துள்ளது. இதற்காக ஆபீஸிலேயே 3 நாட்களாக செந்தில்குமார் தங்க வைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது.

டென்ஷன்

டென்ஷன்

ரெயிடு முடிந்து மறுநாள் வீட்டுக்கு வந்தவர் சோர்வாக இருந்துள்ளார். என்னவென்று மனைவி சித்ரா கேட்டதற்கு ஆபிசில் டென்ஷன் என்று மட்டும் சொல்லி, பிறகு திரும்பவும் வேலைக்கு கிளம்பி சென்றுவிட்டார். அங்கிருந்து மனைவிக்கு போன் பண்ணி பேசியவர், அடுத்த 2 மணி நேரத்திலேயே திடீரென ஆபீஸ் ரூமில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சித்ரா

சித்ரா

இதனால் அதிர்ச்சி அடைந்த சித்ரா மற்றும் குடும்பத்தினர் "செந்தில்குமார் மரணத்தில் உரிய விசாரணை வேண்டும், அவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை இல்லை, வேறு ஏதோ பிரச்சனை உள்ளது" என்று அடையாறு போலீசிலும், சென்னை கமிஷனர் ஆபீசிலும் புகார் அளித்துள்ளனர். விசாரணையும் மும்முரமாகி வருகிறது.

ஆபாச வீடியோ

ஆபாச வீடியோ

இந்நிலையில் செந்தில்குமார் மரணத்தில் திடீர், பகீர், தகவல்கள் விசாரணையில் வெளியாகி வருகின்றன. ரெய்டு நடந்தபோது, செந்தில்குமாரிடம் இருந்து லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஆய்வு செய்தபோதுதான், ஹார்டு டிஸ்க்கில் ஏகப்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதை பற்றிதான் அதிகாரிகள் செந்தில்குமாரிடம் விசாரிக்க, அவர் அவமானம் தாங்காமல் ஆபீசுலேயே தூக்கு போட்டு கொண்டதாக கூறப்படுகிறது.

பாத்ரூம்

பாத்ரூம்

இந்த ஆபீசில் 10 வருஷமாக செந்தில்குமார் வேலை பார்த்து வருகிறாராம்.. அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்களைதான் ஆபாசமாக செந்தில்குமார் வீடியோ எடுத்துள்ளார்.. பெண்கள் ஊழியர்கள் பயன்படுத்தும் பாத்ரூமில் 2 கேமராக்களை திருட்டுத்தனமாக பொருத்தி வைத்துள்ளார்.. அதன்மூலம்தான் வீடியோ எடுத்து, அவைகளை தன்னுடைய ஹார்ட் டிஸ்க்கில் சேகரித்து வைத்துள்ளார். இந்த விஷயம் அங்கு வேலை பார்த்த அப்பாவி பெண்களுக்கு தெரிய காணோம்..

அசிங்கம்

அசிங்கம்

இந்த வீடியோ விஷயம் வெளியே வந்தால் மானம் போய்டும் என்று நினைத்துதான் செந்தில்குமார் தற்கொலை செய்துள்ளதாக ஒரு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், இந்த விஷயத்தை செந்தில்குமார் குடும்பத்தினர் மறுத்துள்ளனர். "ஆபீசில் செந்தில்குமாருக்கு நல்ல பெயர் உள்ளது, இதை கெடுக்கவே இப்படி பொய் புகார் சொல்கிறார்கள், வீடியோ ஆதாரங்கள் எங்கே? அதை எங்களிடம் காட்ட சொல்லுங்கள், செந்தில் குமார் ஹார்ட் டிஸ்க்கில் இருந்துதான் எடுத்தார்களா என்பதை போலீசார் உறுதி செய்ய வேண்டும்" என்கிறார்கள்.

விசாரணை

விசாரணை

செந்தில்குமார் மரணமடைந்து போஸ்ட்மார்ட்டம் இன்னும் நடத்தப்படாமலேயே உள்ள நிலையில், இந்த விஷயத்தில் உண்மை நிலவரம் எது என்பதை போலீசார்தான் வெளிப்படுத்த வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+