ட்விட்டரில் டிரென்ட்டான பிரே ஃபார் நேசமணி.. சுத்தியலையும் நேசமணியையும் மறக்க முடியுமா?
சென்னை: ட்விட்டரில் உலக அளவில் டிரென்ட்டான நேசமணியை மறக்க முடியாத 2019. பிரே ஃபார் நேசமணி, நேசமணியின் புகைப்படம் இருக்கும் டி சர்ட்டுகளும் பிரபலமாகின.
ட்விட்டர் எனப்படும் சமூகவலைதளங்களில் நல்லது கெட்டது, வேண்டியது வேண்டாதது என எல்லாவற்றையும் நெட்டிசன்கள் டிரென்டாக்கி வருகின்றனர். அந்த வகையில் பிரே ஃபார் நேசமணி என்ற ஹேஷ்டேக் உலகளவில் ட்ரென்ட்டானது. பிரென்ட்ஸ் படத்தில் இடம் பெறும் வடிவேலுவின் கதாபாத்திரம் தான் இந்த நேசமணி.
நேசமணியின் அண்ணன் மகன் கிருஷ்ணமூர்த்தி ஆணி பிடுங்கும் போது சுத்தியலை நழுவவிட்டதால் அந்த சுத்தியல் நேசமணியின் தலையில் விழுந்தது. படம் வந்துபோய் 18 ஆண்டுகள் கழித்துவிட்டது. இப்போது அந்த காமெடியை எடுத்து உண்மை சம்பவம் போல ட்ரென்ட்டாக்கியுள்ளனர் நெட்டிசன்கள்.

டிரென்ட்டானது
நேசமணி யாரோ உண்மையான நபர் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என எண்ணி Pray for Nesamani என உலகமே ட்ரென்ட் செய்து வந்தது. இது எப்படி டிரென்ட்டானது தெரியுமா. அது குறித்து ஒரு பிளாஷ் பேக் இதோ..

சுத்தியல்
ஃபேஸ்புக்கில் உள்ள Civil Engineers Learners என்ற பக்கத்தில் சுத்தியல் ஒன்றின் படத்தினை பதிவு செய்து இதை உங்கள் நாட்டில் எப்படி அழைப்பீர்கள் எனக் கேட்கப்பட்டிருந்தது. இதற்கு விக்னேஷ் பிரபாகர் என்பவர் "இதன் பெயர் சுத்தியல்.

பாவம்
இது விழுந்தால் டங், டங் என சத்தம் கேட்கும். ஜமீன் பங்களாவில் வேலை பார்க்கும்போது பெயிண்ட்டிங் கான்ட்ராக்டர் நேசமணியின் தலையை அவரது அண்ணன் மகன் இதை வைத்து உடைத்துவிட்டார். பாவம்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

பிரே ஃபார் நேசமணி
அவரை தொடர்ந்து மற்றவர்கள் தொடர்ந்து பதிலளிக்கவே ஒரு கட்டத்தில், '#Pray_for_Nesamani' , Neasamani எனும் ஹேஷ்டாக்கினை உருவாக்கி அதனை பரப்ப ஆரம்பித்தனர். இந்த ஹாஷ்டாக் இந்திய அளவில் டிவிட்டரில் டிரெண்டிங்கில் இருந்தது. இந்த டிரென்டிங்கை அடுத்து பிரென்ட்ஸ் 2-ஆம் பாகம் எடுக்கும் பேச்சுகளும் அடிப்பட்டன.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications