Flashback! மாமனார் பாலியல் தொல்லை தந்ததாக புகார் செய்தவர் பாஜக நடிகை ரஞ்சனா நாச்சியார்!
சென்னை: அரசு பேருந்தில் தொங்கிய மாணவர்களை தாக்கியதாக கைது செய்யப்பட்ட சீரியல் நடிகையும் பாஜக நிர்வாகியுமான ரஞ்சனா நாச்சியார், தனது மாமனார் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கடந்த ஆண்டு புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
சென்னையை அடுத்த மாங்காடு அருகே கெருகம்பாக்கத்தில் பாலகிருஷ்ணன் நகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சனா நாச்சியார். இவருக்கு வயது 38 ஆகிறது. இவர் வழக்கறிஞர், பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவின் செயலாளராக இருக்கிறார்.

இவர் சீரியல்களிலும் சினிமாவிலும் நடித்து வருகிறார். அண்ணாத்த படத்தில் கூட இவர் நடித்திருந்தார். இந்த நிலையில் நேற்று குன்றத்தூர்- போரூர் சென்ற அரசு பேருந்தில் தொங்கிச் சென்ற மாணவர்களை சரிமாரியாக அடித்தார். மேலும் கன்டக்டரை வாடா போடா என்றும் அறிவில்லையா என்றும் ஒருமையில் பேசியிருந்தார்.
இந்த நிலையில் அவர் மீது போக்குவரத்து ஊழியர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் 5 பிரிவுகளின் கீழ் மாங்காடு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து இன்று காலை ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்டார். இவர் நேற்றைய தினம் மட்டும் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. ஏற்கெனவே கடந்த ஆண்டு மாமனார் மீது புகார் கூறி பரபரப்பை கிளப்பினார்.

கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் சுரேஷ் குமாருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு செய்தியாளர்களை சந்தித்த ரஞ்சனா, நான் நடிகையாக இருப்பதால் என் மாமனார் சரவணவேல், மாமியார் சாந்தி ஆகியோர் என்னை மதிப்பதே இல்லை.
அண்ணாத்த நடிகையின் துயரம்.. முகத்தில் காயத்துடன் மாமனார் மீது பாலியல் புகார்#Annaatthe #அண்ணாத்த #Fatherinlaw #Ranjana #பாலியல் #Actress pic.twitter.com/j7BrWv0f3T
— Oneindia Tamil (@thatsTamil) July 6, 2022
பல முறை என் மாமனார் நீ நடிகைதானே என கேட்டு எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையையும் போலீஸார் எடுக்கவில்லை. இதற்கு காரணம் என் மாமியாரின் நெருங்கிய உறவினர் காவல் துறையில் மிக உயரிய பதவியில் இருப்பதுதான். சில தினங்களுக்கு முன்பு கூட என் மாமனார் என்னை நிர்வாணப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

நான் அவரை தடுக்க முயன்ற போது என்னை பெரிய மரக்கட்டையை கொண்டு என் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார் என கூறி பரபரப்பை கிளப்பியிருந்தார். அவரது புகாரின் பேரில் மாமனார், மாமியாரை விசாரிக்க முயன்ற போது அவர்கள் தலைமறைவாகி இருந்தனர். மேலும் ரஞ்சனாவின் கணவருக்கு மனநிலை சரியில்லை என்றும் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் தற்போது மனநிலை சிகிச்சை பெற்று வருவதாகவும் ரஞ்சனா தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications