Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாகேஷ் பிச்சையெடுத்தாரா.. அதுவும் ரயில்வேகேட்ல "லுங்கியுடன்".. பக்கத்துல யாரு "அவரா"? கிரேட் நாகேஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாகேஷ் பிச்சையெடுத்தாரா? அதுவும் பிரபலமான பின்னும் ரயில்வே கேட்டில் பிச்சையெடுத்தாரா? என்ற செய்தி வியப்பையும், ஆச்சரியத்தையும் கூட்டுகிறது.
நாகேஷை உருவாக்கியது பாலச்சந்தர் என்ற ஒரு பிம்பம் இருந்தாலும், நாகேஷூக்கான புதிய நகைச்சுவை பாதையை விரித்து வைத்தது டைரக்டர் ஶ்ரீதர் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.

பாலச்சந்தர்: ஆனால், "தனிஒருவன்" என்ற அந்தஸ்துக்குள் கொண்டு வந்த பெருமை பாலச்சந்தருக்குதான் சேரும்.. இருவருக்குள்ளும் அந்த அளவுக்கு அந்நியோன்யமும், புரிதலும் இருந்திருக்கிறது.. எனினும் நாகேஷை சினிமா உலகம் புறக்கணித்த காலமும் ஒன்று இருந்தது.. அப்போது, ஓடோடி வந்து அவரை தாங்கி பிடித்த கமல்ஹாசன் நன்றிக்குரியவர் என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டும்..!

Fantastic Character Nagesh and Do you know why Nagesh begged at the railway gate

தன்னை பற்றின குறையையும் நகைச்சுவையாகவே நாகேஷ் அணுகிய விதம் எனக்கு ஆச்சரியத்தை தருகிறது.. ஒரு பேட்டியில், 'மாவு அரைபட நன்றாக கொத்தப்பட்ட அம்மி தேவை... அப்படி கடவுள் என்முகத்திலும் கொத்திய குழிகள்தான், இன்று வாழ்க்கையில் நான் வளர்ந்திட காரணம்" என்றார்.

ரயில்வே கேட்: ஒருமுறை எழுத்தாளர் ஜெயகாந்தனும் நாகேஷும் வெளியூரிலிருந்து காரில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.. தொழுப்பேடு என்கிற ஊரில் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. ரயில் வந்து போக நேரமாகும் என்று சொன்னார்கள்.. அதுவரை என்ன செய்வது என்று நாகேஷ் ஜெயகாந்தனிடம் கேட்க, "பிச்சை எடுக்கலாம்" என்றார் ஜெயகாந்தன்.

"அப்படியா.. அதுவும் சரிதான்.. ஆனால் இப்படியே போய் பிச்சை எடுத்தால் யார் நம்புவார்கள்?" என்று கேட்ட நாகேஷ், காரில் இருந்து லுங்கியை எடுத்து கடகடவென கட்டிக் கொண்டு ரோட்டோரம் போய் உட்கார்ந்துவிட்டாராம்.. இதை பார்த்து மிரண்ட ஜெயகாந்தனும் அதேகோலத்தில் பக்கத்தில் உட்கார்ந்தார்..

வசூல்: 2 பேரும் போவோர் வருவோரிடமெல்லாம் கைநீட்டி பிச்சை எடுத்தனர்... சிலர் பிச்சையும் இட்டனர்... ரயில் வந்து சென்றபிறகுதான் அந்த இடத்தைவிட்டு எழுந்தனர்.. அந்த பிச்சையில் ஜெயகாந்தனுக்குதான் நிறைய வசூல் விழுந்தது. "இதில் நீதான் ஜெயிச்சே" என்று சொல்லி, ஜெயகாந்தனை நாகேஷ் கட்டிப்பிடித்து கொண்டாராம்.

நாகேஷ் சாதி சமயத்துக்கு அப்பாற்பட்டவர் என்பதற்கு, ஒருமுறை அவர் ரேடியோவில் தந்திருந்த பேட்டியே சாட்சி.. அதன் சுருக்கம்தான் இது:

"என் வீட்டைப் பொறுத்தவரைக்கும் நான் ஒரு அந்தணன், பிறப்பால்... நான் ஒரு கிறிஸ்தவ பெண்ணை மணந்து கொண்டேன்... 3 பையன்கள். கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்கள். முதல் மகன் ஒரு கிறிஸ்தவப் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டார்.. 2வது மகன் ஒரு முசல்மான் பெண்ணை கல்யாணம் செய்துகொண்டார். 3வது மகன் ஒரு ஐயர் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டார்.

சாதி மதம்: இப்போது எங்கள் குடும்பத்தில் எந்த குழப்பமும் இல்லை... எனக்கு சாதி மதம் கிடையாது. எவ்வளவு பேர் எத்தனைவிதமான காரணங்கள் சொன்னாலும், கடைசியில் என் முடிவுக்குத்தான் வந்து தீர வேண்டும்... ஜாதி மதமென்று எப்படி வருகிறதென்றால், உன் வெளித்தோற்றம் எனக்கு பிடிக்கவில்லை. அதனால உனக்கு என்னைப் பிடிக்கவில்லை. "இது நெம்பர் 1".

உனக்கு ஒன்று பிடித்தது. அது எனக்கு பிடிக்கவில்லை. அதனால் எனக்கு உன்னை பிடிக்கவில்லை. இதுதான் சார் ஜாதி, மதம்.. "இது நெம்பர் 2,
உனக்கு ஒன்று பிடித்தது.. அதுவே எனக்கும் பிடித்தது... அதனால் உனக்கு என்னை பிடிக்கவில்லை. இதுதான் சார் ஜாதி, மதம்.. "நெம்பர் 3," என்றாராம் நாகேஷ்.

நாகேஷ்: பொதுவாக தேசிய விருதுகளில் காமெடிக்காக தனியாக ஒரு விருது வழங்கப்படுவதில்லை.. அப்படி மட்டும் வழங்கியிருந்தால், தன்னுடைய ஒவ்வொரு படத்துக்கும் நிச்சயம் விருது வாங்கி கொண்டே இருந்திருப்பார் நம்முடைய "சார்லி சாப்ளின்" நாகேஷ்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+