அண்ணே அரசியலில் நான் உங்கள் ரசிகன்! கலிங்கப்பட்டிக்கு நேரில் சென்ற விஜயகாந்தின் ஃபிளாஷ்பேக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் ''அண்ணே அரசியலில் நான் உங்கள் ரசிகன்'' என்று மிகவும் வெளிப்படையாக கூறி அவருடன் நட்புறவை பேணியவர் விஜயகாந்த்.

விஜயகாந்த் தங்கள் கலிங்கப்பட்டி கிராமத்தில் உள்ள பூர்விக இல்லத்துக்கு வந்து சென்றது குறித்தும், தனது தந்தை வைகோ மீது கொண்டிருந்த பற்று பற்றியும் துரை வைகோ பகிர்ந்துள்ள ஃபிளாஷ்பேக் வருமாறு;

Flashback, Vijayakanth told Vaiko that I am your fan in politics

''எங்கள் தென் தமிழ்நாட்டில் மாடக்கூடல் மதுரை மாநகரில் பிறந்து தனது கடின உழைப்பாலும், திறமையாலும் திரைத்துறையில் உச்சத்தை தொட்டவர் தான் தே.மு.தி.க நிறுவனத் தலைவர் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். தொடர் உடல்நலக் குறைவு மற்றும் நுரையீரல் அழற்சி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.''

''சினிமாவில் மட்டுமல்ல. அரசியலிலும் குறிப்பிடத்தகுந்த வெற்றிகளையும், உச்சத்தையும் அடைந்தவர். குறுகிய காலத்திலேயே தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரானார். நமக்கெல்லாம் ஒரே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஒரே நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அதைப்போல, ஒரே புரட்சிக் கலைஞர் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் மட்டும் தான்.''

''அவருடைய அடையாளமாக இருந்தது மனிதநேயம். வள்ளல் தன்மை கொண்டவராக, ஏழை மக்களின் மீது பரிவு கொண்டவராக தன் இறுதி மூச்சுவரை வாழ்ந்தவர். திரையுலகில் பலரை அடையாளப்படுத்தியவர். பலருக்கு வாழ்வு தந்தவர். நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது காவிரி பிரச்சனைக்காக திரையுலகினரை திரட்டி உண்ணாவிரதம் இருந்தவர்.''

''தமிழ் உணர்வும், தமிழீழப் பற்றும் கொண்டவர் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். அந்த உணர்வால் தான் தன் மகனுக்கு விஜய பிரபாகர் என்று பெயர் வைத்தார். எங்கள் இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களின் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர். அரசியலில் அண்ணன் வைகோவுக்கு நான் ரசிகன் என்று சொன்னவர். தேர்தல் பிரச்சாரனத்தின்போது எங்கள் கலிங்கப்பட்டி இல்லத்திற்கு வந்தார்.''

''அனைத்து தரப்பினராலும் அரசியல் எல்லைகளை கடந்து மதிக்கப்பட்டவர். வெகுஜன மக்களின் அன்பை நிரம்ப பெற்றவர். 'நல்ல மனிதர்' என்ற யாராலும் பெற முடியாத அடையாளத்தை பெற்றவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தே.மு.தி.க தொண்டர்களுக்கும், கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் மறுமலர்ச்சி தி.மு.க சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.''

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+