உருவமே இல்லாத "கண்ணீர் அஞ்சலி" போஸ்டர்.. "அவஸ்தை நிச்சயம் உண்டு".. அசந்து போன ஆலங்குடி..!
கொரோனாவைரஸ் விழிப்புணர்வுக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன
சென்னை: இறந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டுவார்கள்.. அல்லது தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களும் ஒட்டி கொள்வார்கள்.. ஆனால், கொரோனாவால் இறந்தவர்களே, கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டுவார்களா? அப்படித்தான் ஆலங்குடியில் ஒட்டி உள்ளனர்..
இந்த 2வது பரவல் இந்த அளவுக்கு மோசமாக இருக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.. ஆனால், 2வது பரவல் இது வீரியமிக்கது என்று கடந்த டிசம்பர் மாதமே விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தும், நாம்தான் அசால்ட்டாக விட்டுவிட்டோம்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்தாலும் தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

விழிப்புணர்வு
10 மணிக்கு மேலதான் அதிகமாக சுற்றி கொண்டிருக்கிறார்கள்.. இவர்களை மடக்கி பிடித்து நம் போலீசாரும் வழக்கு பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.. இதைதவிர ஏராளமான விழிப்புணர்வுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆலங்குடி
அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.. காரணம், இந்த மாவட்டத்தில் தொற்று நிறைய ஏற்பட்டு வருகிறது.. புதுக்கோட்டையை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இதன் தாக்கம் அதிகமாகி உள்ளது.. மக்களும் விதிகளை மீறி ரோட்டில் நடமாடுகிறார்கள்.. இவர்களுக்காகவே ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உண்மையிலேயே இது ஒரு வித்தியாசமான விழிப்புணர்வு முயற்சி.

பேனர்
ஆலங்குடி காமராஜர் சிலை அருகே, ஒரு கண்ணீர் அஞ்சலி பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.. அந்த பேனரில் கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் வழக்கமாக இறந்தவர் போட்டோ அச்சிடப்பட்டிருக்கும்.. ஆனால், இதில் யாருடைய போட்டோவும் இல்லை..

கண்ணீர் அஞ்சலி
மாறாக, "இதில், உங்கள் படம், பெயர் இடம் பெறாமல் இருக்க ஊரடங்கை கடைப்பிடிக்கவும். தேவையின்றி அலைந்தால் அவஸ்தை நிச்சயம் உண்டு.. உங்கள் பாதுகாப்பு, உங்கள் கையில், அரசு விதிமுறைகளை கடைப்பிடிப்போம். இப்படிக்கு கொரோனாவால் இறந்த ஆத்மாக்கள் & கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள்" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

வைரல்
இதுவரை கொரோனாவால் இறந்தவர்களே ஒன்றுதிரண்டுவந்து, இப்படி ஒரு போஸ்டரை வைத்துள்ளதுபோல சித்தரிக்கப்பட்டுள்ளது.. இந்த நுாதன விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர் தற்போது சோஷியல் மீடியாவிலும் வைரலாகி வருகிறது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications