சென்னையில் கோவை, மதுரை, தூத்துக்குடி செல்ல விமான கட்டணம் பல மடங்கு உயர்வு.. ஆனாலும் நடந்த அதிசயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுதந்திர தினத்தை ஒட்டி இன்று விடுமுறை என்பதுடன், நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை எடுத்தால், தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் பலரும் சொந்த ஊருக்கு செல்ல ஆர்வம் காட்டினார்கள். இதனால் விமான கட்டணம் பலமடங்கு உயர்ந்தது. சென்னை- தூத்துக்குடி வழக்கமான கட்டணம்-ரூ.4,301 ஆகும். ஆனால் நேற்று சென்னை-தூத்துக்குடிக்கு ரூ.10,796 ஆக உயர்ந்து இருந்தது. ஆனாலும் ஒரு அதிசயம் நடந்தது.

நாட்டின் 78-வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இன்று பொதுவிடுமுறை ஆகும். அதாவது அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களுக்கும் இன்று கட்டாய விடுமுறை ஆகும். அத்தியாவசிய சேவைகளுக்கும் இன்று வந்தால் இன்னொரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்..

Chennai Flight

இதனிடையே நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை எடுத்தால், அடுத்து சனி, ஞாயிறு விடுமுறைகள் வந்து விடுகிறது. இதனால் 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கி உள்ளார்கள்.

இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் நிரம்பி வழிகிறது.. இதன் காரணமாக விமான டிக்கெட் கட்டணங்கள் நினைத்து பார்க்கவே முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது. பல மடங்கு உயர்ந்துள்ளன.

சென்னை- தூத்துக்குடி வழக்கமான கட்டணம்-ரூ,4,301 ஆக இருக்கும். ஆனால் நேற்றும், இன்றும் கட்டணம் ரூ,10 ஆயிரத்து 796 ஆக உயர்ந்திருக்கிறது. அதேபோல சென்னை- மதுரை வழக்கமான கட்டணம் ரூ.4,063 ஆக இருக்கும். ஆனா நேற்றும், இன்றும் கட்டணம் ரூ.11 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது..

இதேபோல் சென்னை- திருச்சிக்கு வழக்கமாக ரூ,2,382 ஆக இருக்கும்.. ஆனால் நேற்றும் இன்றும் கட்டணம் ரூ.7,192 ஆக எகிறி உள்ளது. சென்னை- கோவைக்கு ரூ.3,369 ஆக இருந்த நிலையில், நேற்றும் இன்றும் ரூ.5,349 ஆக உயர்ந்துள்ளது. சென்னை- சேலத்துக்கு ரூ.2,715 ஆக இருந்த கட்டணம் நேற்றும் இன்றும் ரூ.8,277 ஆகவும் அதிகரித்துள்ளது. விமானங்களில் கட்டணம் எவ்வளவு என்றாலும் பயணிகள் அதை பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.. கூட்டம் அலைமோதியபடியே இருக்கிறது.. எப்படியாவது சொந்த ஊர் செல்ல வேண்டும் என்பதே பல பயணிகளின் விருப்பமாக உள்ளது.

தமிழ்நாட்டிற்குள் உள்ள விமானங்களில் டிக்கெட் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், சென்னையில் இருந்து பிறமாநிலங்களுக்கு செல்லும் விமானங்களில் கட்டணம் உயரவே இல்லை.. உதாரணமாக சொல்வதென்றால், சென்னையில் இருந்து பெங்களூர், ஹைதராபாத், விஜயவாடா, கொச்சி, டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் விமான டிக்கெட் கட்டணங்கள் உயரவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+