ஷாக்.. சென்னை டூ மதுரை, கோவை, தூத்துக்குடி விமான கட்டணம் கிடுகிடுவென உயர்வு.. பின்னணி இதுதான்!
சென்னை: கோடை விடுமுறையையொட்டி வெளியூர் சென்றவர்கள் தங்களின் சொந்த ஊர் மற்றும் பணி செய்யும் இடங்களுக்கு திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்நாட்டு சேவைக்கான விமானங்களின் டிக்கெட் கட்டணம் கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
ஆண்டுதோறும் மே மாதம் கோடை விடுமுறை விடப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்பதால் பலரும் தங்களின் சொந்த ஊர் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதற்கு இந்த ஆண்டும் விதிவிலக்கல்ல.

கடந்த ஏப்ரல் மாதம் இறுதி மற்றும் மே மாதம் துவக்கத்தில் சென்னை, கோவை, மதுரையில் பணி நிமித்தமாக தங்கியவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு குழந்தைகளுடன் செல்ல தொடங்கினர். ஏராளமானவர்கள் விமானத்தில் பயணித்தனர். இதனால் அப்போது உள்நாட்டு விமான கட்டணம் அதிகரித்தது.
இந்நிலையில் தான் கோடை விடுமுறை நிறைவடைவதையொட்டி மக்கள் பலரும் சொந்த ஊர் மற்றும் பணி செய்யும் இடங்களுக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். இதில் முதல் சாய்ஸாக மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஆனால் ரயிலில் டிக்கெட் கிடைக்காத மிடில் கிளாஸ் மக்கள் பஸ்சை தேர்வு செய்யும் அதேவேளையில் வசதி படைத்தவர்கள் விமான பயணத்தை மேற்கொள்கின்றனர்.
இதனால் தற்போது விமானத்தில் 24 மணி நேரத்திற்கு முன்பு பதிவு செய்யும் உடனடி டிக்கெட் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து கோவை செல்ல விமான கட்டணம் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. மதுரை, திருச்சி, தூத்துக்குடி செல்ல 10 ஆயிரம் வரையிலும் விமான டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது.
அதாவது வழக்கமாக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமான டிக்கெட் கட்டணமாக ரூ.3,675 என்ற அளவில் இருக்கும். தற்போது இந்த கட்டணம் ரூ.12 ஆயிரத்தை தொட்டுள்ளது. அதேபோல் சென்னை-திருச்சி விமான கட்டணம் ரூ.2,769 ல் இருந்து ரூ.10 ஆயிரம் வரையும், சென்னை-கோவை இடையேயான விமான டிக்கெட் கட்டணம் ரூ.3,313ல் இருந்து ரூ.10 ஆயிரம் வரையும், சென்னை-மதுரை விமான கட்டணம் ரூ.3,419ல் இருந்து ரூ10 ஆயிரம் வரையும் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்நாட்டு விமான சேவைக்கான டிக்கெட் கட்டணம் இப்படி அதிகரித்துள்ள நிலையில் பிற மாநிலங்களுக்கான செல்வதற்கான கட்டணமும் உயர்ந்துள்ளது. அதன்படி புனே, டெல்லி, மும்பை, திருவனந்தபுரம், கொச்சி ஆகிய நகரங்களுக்கும் விமான கட்டணம் வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.
-
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications