அதிரடியாக குறைந்த ஏவியேஷன் எரிபொருள்.. சர்ரென சரியும் விமான டிக்கெட் விலை.. மக்களுக்கு குட் நியூஸ்
சென்னை: இந்தியாவில் வரும் நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக விமான கட்டணம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் (ஏடிஎஃப்) விலையில் சரிவைக் காரணம் காட்ட இண்டிகோ தனது அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களிலும் எரிபொருள் சர்ஜ் - கட்டணத்தை நீக்குவதாக அறிவித்துள்ளது.

கட்டணம் உயர்வு: 2023 அக்டோபரில் தொடர்ச்சியான ATF விலை உயர்வுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இண்டிகோ விமான நிறுவனம் எரிபொருள் சர்ஜ் கட்டணத்தை அறிமுகப்படுத்தியது. இதனால் விமான கட்டணம் வேகமாக உயர்ந்தது.
தற்போது சர்ஜ் - கட்டணத்தை நீக்குவதாக அறிவித்துள்ளது.. உடனடியாக அமலுக்கு வரும் இந்த முடிவால் விமான கட்டணம் வெகுவாக குறையும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
குறைப்பதாக அறிவிப்பு; இது தொடர்பாக வெளியான அறிக்கையில், "IndiGo தனது உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில், 2024 ஜனவரி 04 முதல் விதிக்கப்படும் எரிபொருள் கட்டணத்தை நீக்குவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் (ATF) விலைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, அக்டோபர் 2023 இல் எரிபொருள் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டது," IndiGo கூறியுள்ளது.
தற்போது அந்த கட்டணம் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களை பின்பற்றி இந்தியாவில் வரும் நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக விமான கட்டணம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டணம் மாற்றம்: "ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் விலைகளில் சமீபத்திய குறைப்புடன், இண்டிகோ கட்டணத்தை திரும்பப் பெறுகிறது" என்று விமான நிறுவனம் கூறி உள்ளது.
அக்டோபரில் கிலோலிட்டருக்கு ரூ. 1,18,199.17 ஆக உயர்ந்திருந்த ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் விலைகள், முந்தைய மாதத்தை விட 5.14 சதவீதம் அதிகரித்து, ஆண்டுக்கு ஆண்டு 2.32 சதவீதம் உயர்ந்து விட்டது. ஆனால் திடீரென நவம்பர் 2023ல் கிட்டத்தட்ட ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் விலை 6 சதவீதம் சரிவைக் கண்டன. .
2024 ஆண்டிலும் சேர்த்து, ஜெட் எரிபொருள் விலை தொடர்ந்து மூன்றாவது மாதமாக தொடர்ந்து குறைந்து, ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் டெல்லியில் ஒரு கிலோ லிட்டர் ரூ.1,01,993.17ஐ எட்டியது. இந்த விலை குறைவால் தற்போது விமான டிக்கெட் விலையும் குறைகிறது.
சர்ஜ் சார்ஜ்: விமான நிறுவனமான இண்டிகோ, பயணித்த தூரத்தின் அடிப்படையில் எரிபொருள் கட்டணம் ரூ.300 முதல் ரூ.1,000 வரை இருக்கும் என்று ஆரம்பத்தில் தெரிவித்திருந்தது. ஒரு விமானச் சேவையின் செலவில் கிட்டத்தட்ட 40 சதவீதத்தைக் ஏடிஎஃப் கொண்டிருக்க முடியும் என்பதால், இந்த நடவடிக்கை குறைந்த கட்டண விமானங்களில் பயணிப்பவர்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது ஏடிஎஃப் விலை குறைவதால் எப்படி பெட்ரோல் விலை குறைவதால் பஸ் டிக்கெட் விலை குறையுமோ அதேபோல் விமான டிக்கெட் விலையும் குறையும். செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில், IndiGo நிறுவனம் ரூ.188.93 கோடி நிகர லாபத்தைப் பெற்றுள்ளது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, செயல்பாடுகளின் வருவாய் 19.57 சதவீதம் அதிகரித்து ரூ.14,944 கோடியாக உள்ளது.
வருவாயும் உயர்ந்து உள்ளதால் இண்டிகோ நிறுவனம்.. தற்போது டிக்கெட் கட்டணங்களை குறைத்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.,












Click it and Unblock the Notifications