சென்னை சுற்றுவட்டார மக்களே உஷார்! செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் நீர்திறப்பு.. வெள்ள அபாய எச்சரிக்கை
சென்னை: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 6000 கன அடி நீரும், புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு 1000 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. கரையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. சென்னை சுற்றுவட்டாரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்நிலைகளில் நீர் வரத்து உயரத் தொடங்கி உள்ளது.

குறிப்பாக சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கான நீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர் வரத்து வேகமாக அதிகரித்து வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதேபோல, புழல் ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 6000 கன அடி நீரும், புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு 1000 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவும், மேலும் நீர் திறப்பு அதிகரிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாலும், கரையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரியானது 20.86 சதுர கி.மீ பரப்பளவில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 21.20 அடி. இதன் முழுக் கொள்ளளவு 3300 மில்லியன் கன அடியாகும். இன்று (14.12.2024) காலை 10 மணி நிலவரப்படி நீர் இருப்பு 19.72 அடியாகவும், கொள்ளளவு 2956 மில்லியன் கனஅடியாகவும் மற்றும் நீர் வரத்து வினாடிக்கு 709 கன அடியாகவும் உள்ளது.
ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. எனவே அணையின் நீரினை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புழல் ஏரியின் மீகைநீர் கால்வாயின் வெள்ள தணிப்புக்காக (Flood Moderation in Redhils Surplus Course) ஏரியிலிருந்து நேற்று 13.12.2024 காலை 9 மணி அளவில் வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், மேலும் இன்று 14.12.2024 பிற்பகல் 12 மணி அளவில் வினாடிக்கு 1,000 கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்படும்.
எனவே, புழல் ஏரியின் நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான நாரவாரிக்குப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், மணலி மற்றும் சடையான்குப்பம் ஆகிய பகுதிகளில் கால்வாயின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதேபோல, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்தும் நீர் வெளியேற்றம் 6 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழுக்கொள்ளளவு 3645 மில்லியன் அடியாகும். இன்று (14.12.2024) காலை 10 மணி நிலவரப்படி நீ இருப்பு 22.76 அடியாகவும், கொள்ளளவு 3315 மில்லியன் அடியாகவும் மற்றும் நீர் வரத்து வினாடிக்கு 2450 அடியாகவும் உள்ளது.
ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. எனவே அணையின் நீரினை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை அடையாற்றின் வெள்ள தணிப்புகள (Food Madenation in Adyar River) ஏரியிலிருந்து நேற்று 13.12.2024 காலை 10.30 மணி அளவில் விணடிக்கு 4500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், மேலும் இன்று 14-12-2024 பிற்பகல் 12 மணி அளவில் வினாடிக்கு 6,000 கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்படும்.
எனவே ஏரியிலிருந்து நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications