சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

''சண்டே.. நான்வெஜ் இல்லாம முடியுமா''.. கொரோனா விதிகளை மறந்து.. மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: நாளை இறைச்சி கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்பதால் அசைவ பிரியர்கள் இன்றே மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம், கூட்டமாக கொரோனா தடுப்பு விதிகளை மறந்து அலைமோதினார்கள்.

Recommended Video

    கொரோனா விதிகளை மறந்து.. மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்! - வீடியோ

    தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. தினசரி பாதிப்பு 13,000-ஐ கடந்து செல்கிறது. உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதனால் தமிழகத்தில் தினமும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கும் போடப்பட்டுள்ளது.

    கொரோனா அலையல்ல...இது சுனாமி... இதை எதிர்கொள்ள தயாராக வேண்டும் - மத்திய அரசு கொரோனா அலையல்ல...இது சுனாமி... இதை எதிர்கொள்ள தயாராக வேண்டும் - மத்திய அரசு

    முழு ஊரடங்கு

    முழு ஊரடங்கு

    கொரோனாவை கட்டுப்படுத்த அடுத்து என்ன கட்டுப்பாடுகள் விதிக்கலாம்? எப்படி கொரோனவை துரத்தலாம்? என்று தமிழக அரசு யோசித்து கொண்டிருக்கும் நிலையில் பொதுமக்கள் எந்தவித பொறுப்புமின்றி கொரோனா கட்டுப்பாடுகளை மறந்து சந்தைகளில் கூடியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இன்று இரவு 10 மணி முதல் திங்கள்கிழமை காலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். கொரோனாவை கட்டுப்படுத்த அடுத்து என்ன கட்டுப்பாடுகள் விதிக்கலாம்? எப்படி கொரோனவை துரத்தலாம்? என்று தமிழக அரசு யோசித்து கொண்டிருக்கும் நிலையில் பொதுமக்கள் எந்தவித பொறுப்புமின்றி கொரோனா கட்டுப்பாடுகளை மறந்து சந்தைகளில் கூடியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இன்று இரவு 10 மணி முதல் திங்கள்கிழமை காலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். கொரோனாவை கட்டுப்படுத்த அடுத்து என்ன கட்டுப்பாடுகள் விதிக்கலாம்? எப்படி கொரோனவை துரத்தலாம்? என்று தமிழக அரசு யோசித்து கொண்டிருக்கும் நிலையில் பொதுமக்கள் எந்தவித பொறுப்புமின்றி கொரோனா கட்டுப்பாடுகளை மறந்து சந்தைகளில் கூடியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இன்று இரவு 10 மணி முதல் திங்கள்கிழமை காலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

    அலைமோதிய கூட்டம்

    அலைமோதிய கூட்டம்

    இதனால் நாளை இறைச்சி கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்பதால் இன்றே அசைவ பிரியர்கள் மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம், கூட்டமாக அலைமோதத் தொடங்கி விட்டனர். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்குவதற்காக கொரோனா தடுப்பு விதிகளை மறந்து விட்டு ஏராளமானோர் குவிந்தனர். இதில் பலர் மாஸ்க் அணியவில்லை. அங்கு இருந்த போலீசார் ஒலிபெருக்கி மூலம் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்குமாறு கூறினார்கள். ஆனால் மக்கள் யாரும் அதனை கண்டுகொள்ளவில்லை.

    கண்டுகொள்ளாத மக்கள்

    கண்டுகொள்ளாத மக்கள்

    கடந்த ஆண்டு காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன அதிகாலை 2 மணி முதல் காலை 7 மணி வரை மொத்த மீன் வியாபாரிகளுக்கு மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டன. அதேபோல் இந்த முறையும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளன. சிதம்பரம் அருகே உள்ள அண்ணங்கோவில் மீன்பிடி துறைமுகத்தில் மாஸ்க் அணியாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மீன் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். திருச்சி குழுமணி ரோடு உள்ள மீன் சந்தையிலும் பொதுமக்கள் எந்த விதமான சமூக இடைவெளி இல்லாமல் கூட்டமாக நின்று மீன்களை வாங்கி சென்றனர்.

    பொறுப்பு வர வேண்டும்

    பொறுப்பு வர வேண்டும்

    இதே போல் தமிழகத்தில் உள்ள பல்வேறு முக்கியமான மீன் மார்க்கெட்டுகளில் இதே நிலை தான் நீடித்தது. ''தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு மட்டும் அனுமதி கொடுத்தார்கள். அப்போது யாரும் கொரோனா தடுப்பு விதிகள் பற்றி யாரும் பேசவில்லை'' என்று கொரோனா தடுப்பு விதிகளை மறந்த ஒரு சிலர் முணுமுணுப்பதை கேட்க முடிகிறது. யார் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்? நாம் நமது கடமையை சரியாக கடைபிடித்து நம்மையும், சுற்றி இருப்பவர்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்பு மக்களுக்கு வர வேண்டும்.

    English summary
    As meat shops will be closed tomorrow, non-vegetarians flocked to the fish market and meat shops today, forgetting the corona prevention rules
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X